மேலும் அறிய

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவ சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையான முறையில் திருவிழா நடைபெற்றது. 

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

இந்நிலையில், இந்த ஆண்டு பேராலயத்தின் 440-வது ஆண்டு பெருவிழா அனைத்து நிகழ்வுகளுடன், முழுமையான பக்தர்கள் பங்கேற்புடன் வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாளான அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி  நடைபெற்றது. 

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன் மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை காலை 8.50 மணிக்கு ஆயர் ஏற்றி வைத்தார். கொடி ஏற்றப்பட்ட போது சமாதானத்தை குறிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து ஏராளமான வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்ச்சையாக பால் குடம், வாழைத்தார் போன்றவைகளை கொடிமரத்தின் பீடத்தில் வைத்து வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கொடிமரத்தின் பீடத்தில் வைத்து அன்னையிடம் ஒப்பு கொடுத்தனர். கொடியேற்றம் முடிந்ததும் பால் மற்றும் பழத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பனிமய மாதா பேராலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்பி தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில் சாதாரண உடையில் ஏராளமான போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

தொடர்ந்து பகல் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்களை அணிவித்தனர். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

திருவிழாவில் வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6-ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழாவில் இரவு 7  மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, ஆகஸ்ட் 5-ம் தேதி பெருவிழா நாளில் காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி ஆகியவை ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகின்றன.

தூய பனிமய மாதா பேராலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி விடுமுறை

10-ம் திருவிழாவான ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் பேராலயத்தை சுற்றி அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதற்கு பதிலாக 13-08-22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
Embed widget