மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி: தரமற்ற தூண்டில் வளைவால் சேதமாகும் படகுகள் - வீரபாண்டியன் பட்டினம் மீனவர்கள் வேதனை
’’மணல் திட்டு சுமார் 100 மீட்டர் தூரம் வரை இருப்பதால் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைவதாக மீனவர்கள் கவலை’’
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்து உள்ள வீரபாண்டியன் பட்டணம் மீன் பிடி தொழிலை பிரதானமாக கொண்ட கடற்கரை கிராமமாகும். இப்பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கொண்டு மீன்பிடித்து வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் மணல் அரிப்புகளை தடுக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டது. இந்த தூண்டில் வளைவு அமைக்கப்படும்போதே தரமானதாக இல்லை என மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் பகுதியில் திடீரென மணல்திட்டு உருவாகியது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. தற்போது இந்த மணல் திட்டு சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இருப்பதால் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைவதாக வேதனை தெரிவிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கவலை அடைந்துள்ளனர்.
இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டும் இவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த மணல் திட்டுகளை அகற்றி மீனவர்களின் வாழ்வாரத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion