மேலும் அறிய

தூர்வாராத கண்மாய்.. சீரமைக்கப்படாத மடைகள்.. கரைகளை மட்டும் பலப்படுத்தும் நீர்வள ஆதாரத்துறை

பாசன கண்மாயில் வளர்ச்சி பணிகள் நடைபெறும்போது, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தை கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்பதே மரபு. அதனை வைப்பாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு வடிநிலக்கோட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தின் கீழ் அய்யநேரி, கீழ்நாட்டுக்குறிச்சி, மேலக்கரந்தை, அயன்வடமலாபுரம், சின்னூர், மேல்மாந்தை போன்ற 29-க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் உள்ள நீரை நம்பி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகின்றன.

கண்மாய் நீர்:

இந்த கண்மாயில் சேமிக்கப்படும் நீரை பயன்படுத்த, மடைகள், வரத்துக்கால்வாய்களை பராமரிக்க, நீர்ப்பிடிப்பு பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க, அந்த நீரை முறையாக பாசனத்துக்கு பயன்படுத்த, வயல்களுக்கு செல்லும் கால்வரத்துகளை பராமரித்தல் போன்ற பணிகளை செய்ய ஒவ்வொரு பாசன கண்மாய்க்கும் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

தூர்வாராத கண்மாய்.. சீரமைக்கப்படாத மடைகள்.. கரைகளை மட்டும் பலப்படுத்தும் நீர்வள ஆதாரத்துறை

தூர்வாராத கண்மாய்கள்:

தமிழ்நாடு அரசின் குளம் மராமத்து பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு பாசன கண்மாய்க்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எட்டயபுரம் வட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி பாசன கண்மாயில் சுமார் 1200 ஏக்கர் நிலம் ஆயக்கட்டாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் நீர்பிடிப்பு பகுதி மண்மேடாகிவிட்டது.

மேலும், முதல், கடை, ஊடு ஆகிய 3 மடைகளும் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் மழைக்காலங்களில் கண்மாயில் சேமிக்கப்படும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் பழுதடைந்த மடைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாகி கிடக்கும் கண்மாயை தூர்வாரவும் பலமுறை  கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

தூர்வாராத கண்மாய்.. சீரமைக்கப்படாத மடைகள்.. கரைகளை மட்டும் பலப்படுத்தும் நீர்வள ஆதாரத்துறை

அதிகாரிகள் பதில்:

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, ஒவ்வொரு முறையும் நாங்கள் கோரிக்கை வைக்கும் போதும், தற்போது நிதி நிலை சீராக இல்லை. நிதி நிலை சரியானவுடன் முன்னுரிமை அடிப்படையில் மடைகள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்படும் என அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கண்மாயின் கரையில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றி கரைப்பலப்படுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது விவசாயிகள் அடிப்படை கோரிக்கைகளான மடைகளை சீரமைக்காமல் கரையில் உள்ள வேலி மரங்களையும், கரையையும் எந்தவித பலனும் இல்லை.

அதனால் முதலில் மடைகளை சீரமைக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால், கரைகளை சீரமைக்க ஏற்கெனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டதால், தற்போது எதுவும் செய்ய முடியாது. வரக்கூடிய ஆண்டில் கோடை காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விளாத்திகுளம் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்திருந்தார்.

தூர்வாராத கண்மாய்.. சீரமைக்கப்படாத மடைகள்.. கரைகளை மட்டும் பலப்படுத்தும் நீர்வள ஆதாரத்துறை

ஏமாற்றத்தில் விவசாயிகள்:

இந்த கோடையில் நிச்சயமாக மடைகளை சீரமைத்துவிடுவார்கள் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாயில் மீண்டும் கரைகளை உள்ள வேலி மரங்களை அகற்றி கரையை பலப்படுத்துவதற்கு இயந்திரங்கள் மூலம் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக மடைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால், எங்களின் கோரிக்கையை ஏற்காமல் கடந்த ஆண்டைபோலவே கரையில் உள்ள வேலி மரங்களையும், கரையை மேம்பாடு பணிகளையே செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு துளிக்கூட பயனில்லை. கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி மேடாக உள்ளது. தூர்வாரவும் இல்லை. மடைகளை சீரமைக்கவும் இல்லை. இதனை செய்யாமல் கரைகளை பலப்படுத்துவதால் எந்த பயனுமில்லை. அதிகாரிகள் முறையாக திட்டமிடுதலுக்கு முன்பு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் கலந்தாலோசிப்பதுமில்லை. விவசாயிகளின் கோரிக்கையை காது கொடுத்து கேட்பதுமில்லை. இதுபோன்ற நிலை தான் நீர்வள ஆதாரத்துறையில் உள்ளது. 

தூர்வாராத கண்மாய்.. சீரமைக்கப்படாத மடைகள்.. கரைகளை மட்டும் பலப்படுத்தும் நீர்வள ஆதாரத்துறை

எந்தவொரு பணியையும் நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு செய்வதில்லை. தாங்களாக திட்ட மதிப்பீட்டை செய்து கொண்டு பணியை செய்து வருகின்றனர். இதனால், நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்ற தோற்றத்தில் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பாசன கண்மாயில் வளர்ச்சி பணிகள் நடைபெறும்போது, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தை கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்பதே மரபு. அதனை வைப்பாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட திட்டமதிப்பீடு என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் மாறிக்கொண்டே உள்ளனர். ஒவ்வொரு முறையும் புதிதாக வந்தவர்களிடம் மனு அளித்து ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆட்சியரின் சிறப்பு கவனம் செலுத்தி தனது விருப்ப நிதியின் கீழ் கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாயில் உள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget