விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி மனம் விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து தற்போது சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது
ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து
2024 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் , ஜி.வி பிரகாஷ் தொடர்ந்து விவாகரத்து அறிவித்த தம்பதி ஜெயம் ரவி ஆர்த்தி. நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் மாதம் தனது பிறந்தநாளுக்கு முன்பாக தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இருதரப்பினரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக அவர்தெரிவித்திருந்த நிலையில் ஆர்த்தி அதற்கு மாறாக இந்த விவாகரத்தில் ஜெயம் ரவி தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கெனிஷா என்கிற பாடகியுடன் ஜெயம் ரவி காதல் உறவில் இருப்பது தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என வதந்திகள் பரவின. தொடர்ந்து ஆர்த்தி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆர்த்தி மற்றும் அவரது அம்மாவும் சேர்ந்து ஜெயம் ரவியின் வங்கி கணக்கை கையகப்படுத்தியதாகவும் அவருக்கு தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. மேலும் விவாகரத்து அறிவித்த இன் ஜெயம் ரவி தனது வீட்டில் இருந்து வெளியேறியதும் ஆர்த்தி வசம் இருந்த தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டு தரும்படி மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் பக்கம் நியாயம் இருக்கிறது , யார் உண்மையை பேசுகிறார்கள் என்று ரசிகர்களை குழப்பியடித்தது இந்த விவகாரம் .
மனம் விட்டு பேச நீதிமன்ற அறிவிறுத்தல்
விவாகரத்து கோரி இன்று சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பினரையும் மனம் விட்டு பேசி சமரசத்திற்கு வரும்படி அறிவுறுத்தினார். இதனடிப்படையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையில் ஒரு மணி நேரம் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இருவரும் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க : புஷ்பா 2 ஓடிடியில் வெளியாகாது...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு.. என்னாச்சு ?
Viduthalai 2 Leaked : ஒரே நாளில் மொத்த படமும் ஆன்லைனில்..பைரசிக்கு இரையான விடுதலை 2