மேலும் அறிய

நெல்லையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்

தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில்  கர்ப்பிணி பெண்களுக்கான தாய் கேர் திட்டம் கொண்டுவரப்பட்டது நெல்லையில் தான்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 156.28 கோடியில் 727 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 74.24 கோடியில் முடிவற்ற 29 திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 117.78 கோடி ரூபாயில் 30,658 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நிகழ்ச்சியில் சபாநாயகர் நன்றாக பேசினார். ஆனால் சுருக்கமாக பேசவில்லை, இருப்பினும் அவர் கூறிய கருத்துகள் நன்றாக இருந்தது. வீரத்தின் விளைநிலமான திருநெல்வேலியில் பேசுவதால் பெருமை அடைகிறேன். புலவர்களால் பாராட்டப்பட்ட ஊர். தமிழகத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் முதலில் உருவான ஊர் நெல்லை தான்.  தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு நகரம் இது. நெல்லையப்பர் கோயிலின் குடமுழுக்கை கலைஞர் சிறப்பாக நடத்தி வைத்தார். அதே போல 1973ம் ஆண்டு இங்கு ஈரடுக்கு மேம்பாலத்தை அமைத்து அதுக்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர்.  இத்தகைய சிறப்பு மிக்க மாவட்டத்தில் விழா நடந்து வருகிறது.

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் இரட்டை குதிரை வேகத்தில் செயல்படுகிறார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் நெல்லையை தொல்லை என நினைக்காமல் தனது எல்லையாக நினைத்து செயல்படுகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி மக்களுக்கு மிக மிக பலனுள்ளதாக உள்ளது. 1113 பேர் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு சார்பில் 9389 விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 54,917 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் இலவச பயண திட்டத்தில 6 கோடி 92 லட்சம் மகளிர் இதுவரை பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கபட்டுள்ளது. அதில் 3,421 பேர் நெல்லையில் பயன் பெற்றுள்ளனர். 156 கோடி 28 லட்சல் மதிப்பில் இன்று 727 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். 74.24 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 30658 பயனாளிகளுக்கு 117.78 கோடி மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்

பொருநை நாகரீகம் தோன்றிய நகரம் இது. எனவே அதை போற்றும் வகையில் 15 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம் 2009ல் துணை முதல்வராக இருந்தபோது 369 கோடி கலைஞர் முதல்கட்டமாக நிதி ஒதுக்கினார். கடந்த பத்து ஆண்டுகளாக அதில் எந்த பணியும் இல்லாமல் கிடப்பில் போட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன். எனவே வரும்  2023க்குள் அத்திட்டம் முடிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதன் மூலம் நெல்லை தூத்துக்குடியில் 20,340 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மணிமுத்தாறில் சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லுயிர் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கபடும். வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். கடற்கரை கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கபடும். நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலைக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 370 கோடியில் மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில்  கர்ப்பிணி பெண்களுக்கான தாய் கேர் திட்டம் கொண்டுவரப்பட்டது நெல்லையில் தான்.

என்னை பொறுத்தவரை பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்க கூடாது. அதனால் தான் உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தை தொடங்கினேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இந்தியா முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget