எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் பேரவை விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் அவர்கள் விருப்பத்தின்படியே சட்டமன்றத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர்கள் கட்சிக்குள் பிரச்சனை என்பதால் இடத்தி மாற்றி கேட்கிறார்கள்.
![எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் பேரவை விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு Speaker Appavu says Only the Leader of the Opposition will be allotted the seat approved by the rules of the House - TNN எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் பேரவை விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/04/4107581b02c1d56aa0df5e36df68c63f1707047634493571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். தமிழக சட்டமன்றம் பேரவை விதிப்படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் நடந்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டுமே பேரவை விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் மற்ற உறுப்பினர்கள் இடத்திற்கு உரிமை கோர முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி 50 அடி கொள்ளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை உள்ளது . இந்த அணையில் தற்போது 49.20 அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக முதல்வர் அணையை திறக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதன் மூலம் மடத்துக்கால், நாங்குநேரியான் கால்வாய் , மேலும் பச்சையாற்றின் குறுக்கே உள்ள ஐந்து சிறிய அணைக்கட்டுகள் மூலம் 9,952 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். 4-02-24 முதல் 31-03-24 வரை 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது .மேலும் 115 குளங்கள், 13 கிராமங்கள் ஆகியவை பயன்பெறும் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் உத்தரவுப்படி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விசையான சாகுபடிக்காக வடக்குபஞ்சர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது தினமும் 100 அடிக்கும் முகாமல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்பின்னர் சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு கடந்த காலத்தில் கலைஞர் வீல் சேரில் வந்த போது இரண்டாவது வரிசையில் இடம் கேட்கப்பட்ட போது அப்போதைய சபாநாயகர் ஒதுக்கவில்லை, இருக்கை ஒதுக்குவது சபாநாயகரின் முடிவு என கூறினார், நான் அதனை காரணமாக காட்டவில்லை ஒரே கட்சி ஒரே சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கும் அவர்கள் விருப்பத்தின்படியே சட்டமன்றத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இப்போது அவர்கள் கட்சிக்குள் பிரச்சனை என்பதால் இடத்தி மாற்றி கேட்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை பேரவையின் விதிப்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும் நடந்து வருகிறது. இங்கு யாரும் தவறு செய்யவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் தான் பேரவை விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட இடம் ஒதுக்கப்படும் மற்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு உரிமை கூற முடியாது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியல் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ் ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)