மேலும் அறிய

இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல் - 21 பேர் பேர் மீது வழக்குப்பதிவு

’’ஆலந்தலை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இலங்கைக்கு தான் பீடி இலை கொண்டு போறோம் என்ன செய்வன்னு தாக்க முயன்றுள்ளனர்’’

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
                                   இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல் - 21 பேர் பேர் மீது வழக்குப்பதிவு
 
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, வெங்காய வித்து, கடல் அட்டை உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியை அதிகரித்து உள்ளனர். இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவினர் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், வில்லியம் பெஞ்சமின் மற்றும் போலீசார் அடங்கிய மற்றொரு குழுவினர் அமலிநகர் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
                                   இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல் - 21 பேர் பேர் மீது வழக்குப்பதிவு
 
அப்போது திருச்செந்தூரை அடுத்து உள்ள அமலிநகர் கடற்கரையில் சிலர் சுமார் 50 வெள்ளை சாக்கு மூட்டைகளில் இருந்த பொருட்களை 2 படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர். இதனால் போலீசார் விரைந்து சென்று அந்த மூட்டைகளை பரிசோதிக்க முயன்றனர். அப்போது படகில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்த ஆலந்தலையை சேர்ந்த சுஜெய், நிஜான், பிரதாப், ஆனந்த், கார்ட்டர், சீரியாக், சரவல், சைமன், லிஸ்டன், ஆசைத்தம்பி, ஆரோக்கியம், அனஸ்டன், லேண்டோ, ராஜா, அஜித், அஜீஸ், மற்றொரு ராஜா, கெவிஸ், ஜாக்சன் லோபா, ஜோனஸ், லக்சன் ஆகிய 21 பேர் உள்பட சிலர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
 
தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அவர்கள் 2 படகிலும் ஏறி ஏற்கனவே படகுகளில் ஏற்றி வைத்த மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றனர். மேலும் ஆலந்தலை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இலங்கைக்கு தான் பீடி இலை கொண்டு போறோம் என்ன செய்வன்னு தாக்க முயன்றுள்ளனர். அப்போது 16 மூட்டைகளை மட்டும் கரையில் விட்டு விட்டு சென்று விட்டனர். இந்த மூட்டைகளில் சுமார் 600 கிலோ பீடி இலைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் என்று கூறப்படுகிறது.

                                   இலங்கைக்கு கடத்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல் - 21 பேர் பேர் மீது வழக்குப்பதிவு
 
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற 21 பேர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கடல் வழியாக கடத்தல் தொடரத்தான் செய்கிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget