நெல்லையில் தாசில்தார் வீட்டில் கட்டு கட்டாக லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
12 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 28 லட்சத்தி 91 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
![நெல்லையில் தாசில்தார் வீட்டில் கட்டு கட்டாக லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் police confiscated lakhs of money from the house of Tahsildar in Nellai TNN நெல்லையில் தாசில்தார் வீட்டில் கட்டு கட்டாக லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/21/526d610ee2c26e3dc903542a4130eeb51679410462849109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்படும் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவரது வீடு கேடிசி நகரில் உள்ளது. இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாக பணம் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி எஸ்கால் மற்றும் காவல் ஆய்வாளர் ராபின் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த சோதனை சந்திரன் வீடு மட்டுமின்றி அவரது மருமகன் முத்துப்பாண்டி வீடு மற்றும் தூத்துக்குடியில் உள்ள அவரது உறவினர்கள் இருவர் வீடு என மொத்தம் 4 இடங்களில் இச்சோதனையானது நடைபெற்றது. இச்சோதனையில் சந்திரனின் வீட்டில் சாக்குப்பையில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்காக வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. 12 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 28 லட்சத்தி 91 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தொடர் விசாரணையானது நடைபெற்று வருகிறது. தாசில்தார் வீட்டிலிருந்து லட்ச லட்சமாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)