மேலும் அறிய

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - நடந்தது என்ன..?

சட்டவிதிகளின்படி அடுத்து ஓராண்டுக்கு மேயர் மீது கவுன்சிலர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 44 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு 12-01-2024 அன்று நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கடந்த 27ஆம் தேதி அறிவித்திருந்தார். அதேசமயம் வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் கவுன்சிலர்களை திமுக தலைமை சமாதானப்படுத்தியது. குறிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவித்ததோடு இந்த பொறுப்பை பார்த்துக் கொள்ளுமாறு முன்னாள் மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்பிடம் தெரிவித்து சென்றதாக கூறப்பட்டது. அமைச்சரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மீண்டும் திமுக நிர்வாகிகள் தலைமையில் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இருப்பினும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மன நிலையில் இருப்பதாகவே தெரிந்த நிலையில் அனைத்து கவுன்சிலர்களையும் 3 குழுக்களாக கன்னியாகுமரி, விருதுநகர் என இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நெல்லையிலிருந்து கவுன்சிலர்கள் அனைவரும் கிளம்பி சென்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மேயர் சரவணன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் விவாதம் மாநகராட்சி ஆணையர் அறிவித்தப்படி தொடங்கியது. அப்போது மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு சென்றார். அதே சமயம் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு கவுன்சிலர்கள் கூட வரவில்லை. நெல்லை மாநகராட்சியை பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் இதில் 44 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் மீதமுள்ள 11 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இருப்பினும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரில் ஒருவர் கூட கூட்டத்திற்கு வரவில்லை..  இதனால் தீர்மானம் தோல்வியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்வி - நடந்தது என்ன..?

அதன்படி ஒரு மணி நேரத்திற்கு பின் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் செய்தியாளர்களிடம் கூறிய போது, கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, எனவே கோரம் இல்லாததால் கைவிடப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தீர்மானம் தோல்வியில் முடிந்ததால் சட்ட விதிகளின்படி அடுத்து ஓராண்டுக்கு கவுன்சிலர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது எனவும் அறிவித்து சென்றார். முன்னதாக பாதுகாப்பிற்காக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சுழல் நிலவியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget