Watch video : கடல்நீரை அசுர வேகத்தில் உறிஞ்சிய மேகங்கள்...! நடுக்கடலில் நிகழ்ந்த அரிய நிகழ்வு...! நெல்லையில் நிகழ்ந்த அதிசயம்...
மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே வானத்தில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே இருந்து வால் போன்று சுழன்று கடலுக்குள் வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது கூட்டப்பனை கடற்கரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலுக்கு அருகே மீன் பிடிக்கச்சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே வானத்தில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே இருந்து வால் போன்று சுழன்று கடலுக்குள் வந்துள்ளது.
உவரி அருகே கூட்டபனை நடுக்கடலில் இருந்து மேகங்கள் அசுர வேகத்தில் நீரை உறிஞ்சி செல்லும் அரிய நிகழ்வால் பரபரப்பு... வைரல் வீடியோ... @abpnadu @SRajaJourno pic.twitter.com/uD1gCWofLa
— Revathi (@RevathiM92) December 4, 2022
இதனை கண்ட மீனவர்கள் அச்சத்துடன் அதனை நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது அசுர வேகத்தில் சுழன்று வந்த நிலையில் கடலுக்குள் இருந்து நீரை உறிஞ்சி சென்றுள்ளது. இந்த காட்சியை கண்டு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மிரண்டு போய் உள்ளனர். மேலும் அந்த அதிசய காட்சியை மீனவர்கள் தங்கள் படகில் இருந்தவாறே செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும் பொழுது, இது போன்ற நிகழ்வை இதுவரை தாங்கள் பார்த்ததில்லை.. இந்த அரிய நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்றும் தங்களுக்கு புரியவில்லை. திடீரென கடலுக்கு வித்தியாசமான நிகழ்வு ஏற்பட்டதை பார்த்தவுடன் அனைத்து மீனவர்களும் ஒன்று திரண்டு அருகே செல்ல முற்பட்டோம், ஆனால் சூறாவளி போன்று அசுர வேகத்துடன் சுழன்று நின்றதால் அருகே நெருங்க முடியவில்லை.. தொலைவில் இருந்தே அதனை படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிர்ந்தோம் என்று தெரிவித்தனர். குறிப்பாக பருவநிலை மாற்றங்கள் காரணமாக வானில் இது போன்ற அபூர்வ நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மீனவர்கள் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்