மேலும் அறிய

சூரிய உதயம் காண குமரியில் அதிகாலை குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
 
இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதே போல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
 
சூரிய உதயம் காண குமரியில் அதிகாலை குவிந்த சுற்றுலா பயணிகள்
 
கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்ததை பார்வையிட்டு வந்தனர்.
 
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வந்தது. இதனால்  குமரி களை கட்டியது. 
 
சூரிய உதயம் காண குமரியில் அதிகாலை குவிந்த சுற்றுலா பயணிகள்
 
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற் கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க ஏதுவாக கூடுதல் படகு தளம் அமைத்து படகுகள் இயக்கப்பட வேண்டும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கடல்வழி பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மட்டுமே செய்து வரும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பாலம் அமைகும் பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில்  தொண்டர்கள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில்  தொண்டர்கள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?
”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?
”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!
”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!
"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! - 4 நாட்களுக்கு கனமழை: எப்போது எந்தெந்த மாவட்டங்களில்? 
தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! - 4 நாட்களுக்கு கனமழை: எப்போது எந்தெந்த மாவட்டங்களில்? 
Embed widget