குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை - கொலைக்கான காரணம் தெரியாமல் போலீஸ் திணறல்
பிரேத பரிசோதனையை முழு வீடியோ பதிவும் செய்து வைத்துள்ளனர் பெண் தற்கொலைக்கான காரணம் கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலா வில் உள்ள ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜி (27), குழந்தைகள் 2 வயதான பிரியா, மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தையும் உண்டு. இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது அவரது மருமகள் விஜி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டதையடுத்து அப்பகுதியினர் அங்கு வந்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை டிஎஸ்பி கணேசன் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மனைவி மகள் இறந்த தகவல் அறிந்து நேற்று முன்தினம் இரவு இறந்த பெண்ணின் கணவர் ஜெபஸ்டின் ஊருக்கு வந்துள்ளார் அவரிடம் ஏதாவது குடும்பத்தகராறு உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சினை உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பாக அவரது செல்போன் எண்களை ஆய்வு செய்து அதில் ஏதும் தகவல் கிடைக்குமா என முயற்சி செய்து வருகின்றனர் மேலும் விஜி கடைசியாக பேசியது அவரது தாயாரிடம் ஆனால் தற்கொலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை மாமியார் மருமகள் இடையே ஏதும் பிரச்சினை உண்டா என்ற கோணத்தில் விசாரிக்கும்போது அதிலும் இல்லை என கூறப்படுகிறது விஜி தற்கொலை செய்தது மர்மமாக இருக்கும் சூழ்நிலையில் ஏதாவது கடிதம் உள்ளதா வேறு ஏதும் பிரச்சினை உள்ளதா என உண்மையை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அசம்பாவிதம் நடந்த இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது அப்பகுதியில் வேறு எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இறந்து போன மூன்று பேரும் உடல்களுக்கும் உடற்கூறு ஆய்வு முடிந்தபின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் பிரேத பரிசோதனையை முழு வீடியோ பதிவும் செய்து வைத்துள்ளனர் பெண் தற்கொலைக்கான காரணம் கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்