மேலும் அறிய
குமரியில் கடலில் மூழ்கிய படகு....உயிர் தப்பிய 19 மீனவர்கள்...!
மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. 19 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரியில் படகு மூழ்கியது
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் படகு கடலில் மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கில்பர்ட். இவருக்கு சொந்தமான "விண்ணேற்பு மாதா" என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22-ம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என 19 பேர் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

விசைப்படகானது 40 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் 24ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி மூழ்க தொடங்கியுள்ளது.
விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் கடல் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்ற விசைப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு "நிகாஷ்" என்ற விசைப்படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் கடல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அந்த படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















