மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரியில் செப்பனிடும் பணியில் தரம் இல்லை என குற்றச்சாட்டு.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரட்டியடிப்பு
சம்பந்தப்பட்ட சாலை பணி ஒப்பந்ததாரருமான கேட்சன் தடிக்காரன் கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையிலான கும்பல் ஓட ஓட விரட்டி அடித்ததால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலை செப்பனிடும் பணியில் தரம் இல்லை என குற்றஞ்சாட்டி அதிகாரிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை, திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும் சம்பந்தப்பட்ட சாலை பணி ஒப்பந்ததாரருமான கேட்சன் தடிக்காரன் கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையிலான கும்பல் ஓட ஓட விரட்டி அடித்ததால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை செப்பனிட தமிழக அரசு பல கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் இருந்து துவரங்காடு பகுதி நோக்கி செல்லும் சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும் அரசு ஒப்பந்ததாரருமான கேட்சன் என்பவர் 3 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சாலையை தரமற்ற முறையில் செப்பனிடுவதாக குப்பஞ்சாாட்டியும் , பழைய சாலையை தோண்டாமல் செப்பனிடப்படுவதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் செப்பனிடம் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாய் தகராறில் ஈடுபட்டனர். இதை அறிந்த சம்பந்தப்பட்ட சாலை பணியின் ஒப்பந்ததாரரும் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன் தண்டிக்காரன்கோணம் ஊராட்சி தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான பிராங்கிளின் ஆகியோர் தலைமையிலான கும்பல் நாம் தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டி அடித்தனர்.
நாம் தமிழர் கட்சியினரை கும்பலாக அடித்து துரத்திய காட்சி அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை தடிக்காரன் கோணம் ஊராட்சித் தலைவர் பிராங்கிளின் கன்னத்தில் அறைந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பை சேர்ந்தவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion