மேலும் அறிய
Advertisement
வலியால் துடித்த கூலித் தொழிலாளி - 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த செவிலியருக்கு குவியும் பாராட்டு
நிலைமை மோசமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்த சொல்லி தாயையும் சேயையும் காப்பாற்றும் நோக்கில் செவிலியர் ஆதிலெட்சுமி ஆம்புலன்ஸ்லேயே அருணாவிற்கு பிரசவம் பார்த்தார்
ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையன் கூலி தொழிலாளியான இவர் வேலை தேடி தனது கர்ப்பிணி மனைவி அருணா மற்றும் 3-பெண் குழந்தைகளுடன் கன்னியாகுமரி வந்துள்ளார் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் வேலைக்கு சேர்ந்த அவர் வீடு கிடைக்காததால் கொட்டாரம் பகுதியில் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை கர்பிணியான அருணாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு சத்தமிடவே இதை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் செவிலியர் ஆதிலெட்சுமி அருணாவை பார்த்த போது அவருக்கு பனிக்குடம் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டார். ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிலைமை மோசமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்த சொல்லி தாயையும் சேயையும் காப்பாற்றும் நோக்கில் செவிலியர் ஆதிலெட்சுமி ஆம்புலன்ஸ்லேயே அருணாவிற்கு பிரசவம் பார்த்தார்.
இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது பின்னர் உடனடியாக தாயையும் குழந்தையையும் ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது தாயும் சேய் யும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் நேரம் தாழ்த்தாமல் சிகிச்சை அளித்து தாயையும் சேய்யையும் தகுந்த நேரத்தில் பிரசவம் பார்த்து காப்பாற்றிய 108-ஆம்புலன்ஸ் செவிலியர் ஆதிலெட்சுமிக்கும் ஓட்டுநர் தர்மராஜுக்கும் பாராட்டுகள் குவிகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion