மேலும் அறிய

60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்தார்!

கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரதச்சத்தும் குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ எப் எஸ் 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 இலட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66,000 பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் விழாவினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்தார்!

பி்னனர் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது:

‘’தூத்துக்குடி மாநகராட்சி நகரின் தூய்மை சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றின் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்து பராமரித்தல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை சுத்தம் செய்து வேலி அமைத்து, அடர் காடுகள் முறையில் அதிகப்படியான மரங்களை நடுதல், நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் நீரூற்றுகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்தார்!

நகரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை அமைப்புகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவு நீர் தருவைகுளம் கலவை உரக்கடங்கில் அமையப்பெற்ற சுமார் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரினை திறம்பட பயன்படுத்தும் விதமாகவும், இயற்கைச் சூழலை மேம்படுத்தும் விதமாகவும் அதிகப்படியான மரங்களை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரையிலும் சுமார் 50,000 மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.

60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்தார்!

இந்நிலையில், தற்போது, கூடுதலாக 60 ஏக்கர் பரப்பளவில் 60,000 மரக்கன்றுகளை மியாவாக்கி என்ற அடர் காடுகள் முறையில் நடும் நிகழ்வும், மேலும் மாநகராட்சி சார்பாக பலன் தரும் மரங்களை நடுவதற்கு உத்தேசித்து ஒரு ஏக்கர் பரப்பளவில் இனிப்பு புளி, நாட்டுப்புளி, சிவப்பு புளி, குடம்புளி, கொடுக்காப்புளி போன்ற பல்வேறு வகையான புளிய மரங்கள் நடப்படும்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் ஆல மரங்களும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்கி தரமான தீவனங்கள் ஆண்டுதோறும் கிடைக்க வழிவகை செய்யும் விதத்திலும் பொதுமக்களுக்கு நல்ல சத்தான பால் கிடைக்கும் வகையிலும் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனை செய்யவும் உத்தேசித்து சோதனை முயற்சியாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரதச்சத்தும் குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ எப் எஸ் 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது’’ என தெரிவித்தார்.

60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி தொடங்கிவைத்தார்!

இந்நிகழ்வில்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், வீ கேன் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget