இஸ்ரோவில் வேலை! நெல்லையில் பயிற்சி பணி: டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
இஸ்ரோ, உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கே டப் கொடுக்கும் அளவில் அசாத்திய சாதனைகளை செய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ உந்துவிசை (Propulsion) அமைப்பை ஒருங்கிணைக்கும் மையத்தில் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டம் (டிகிரி) முடித்தவர்கள், பொறியியல் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் அறிவிப்பு குறித்த விபரங்களை பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் மத்திய அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையின் கீழ் செயல்படும் இஸ்ரோ, உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கே டப் கொடுக்கும் அளவில் அசாத்திய சாதனைகளை செய்து வருகிறது.
இஸ்ரோவில் வேலை பார்த்து நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையினர் மத்தியில் இருக்கும். இஸ்ரோ உந்துவிசை (Propulsion) அமைப்பை ஒருங்கிணைக்கும் மையம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இதில்தான் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார்? யார்? விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்: பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் (Engineering)
மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 12
எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் - 10
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் - 05
சிவில் என்ஜினியரிங் - 04
Instrumentation என்ஜினியரிங் - 03
கெமிக்கல் என்ஜினியரிங் - 02
கணினி அறிவியல் பொறியியல் - 05 பட்டதாரி பயிற்சி (பொறியியல் அல்லாதது)
B.A - 04
B.SC - 07
B.COM - 04
தொழில்நுட்ப பயிற்சி:
மெக்கானிக்கல் பொறியியல் - 15
மின்னணு பொறியியல் - 10
மின் பொறியியல் - 10
சிவில் பொறியியல் - 05
வேதியியல் பொறியியல் - 04
கல்வித் தகுதி:
டிப்ளமோ, பி.இ / பி.டெக், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் ஆகிய படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணிக்கு 28 வயது வரையும், டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பயிற்சிக்கு 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஊதியம்:
டிகிரி கல்வித் தரம் (பொறியியல்) - ரூ.9000/-
டெக்னிஷியன் - ரூ.8000/-
தேர்வு முறை: தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வாளர்கள் நேரடியாக செல்லலாம்.
நேர்காணல் தேதி: பட்டதாரி அப்ரெண்டீஸ் (பொறியியல்): 10.01.2026 அன்று காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ்: 10.01.2026 அன்று மதியம் 02:00 முதல் மாலை 04:00 வரை
டிகிரி அப்ரெண்டீஸ் (பொறியியல் அல்லாதது): 11.01.2026 அன்று காலை 09:30 முதல் மதியம் 12:00 வரை





















