மேலும் அறிய

அமலாக்கத்துறை யாரையோ திருப்திபடுத்தும் விதமாக செயல்படுவது ஏற்புடையதல்ல - சபாநாயகர் அப்பாவு

பாராளுமன்றத்திற்கு எவ்வளவு மாண்பு இருக்கிறதோ, இந்திய தலைமை செயலகத்திற்கு எவ்வளவு மாண்பு இருக்கின்றதோ அதை விட மிக அதிகமான மாண்பு சட்ட பேரவைக்கு, தலைமை  செயலகத்திற்கும் உள்ளது.

கோதையாறு பாசனத் திட்ட அணையிலிருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, "தமிழக முதல்வர் உத்தரவின் படி  ராதாபுரம் வட்டத்தில் உள்ள 9 கிராமங்களில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன  வசதி பெறும் வகையில் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி அதாவது 153 நாட்கள் தொடர்ந்து கால்வாயில் விடப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி யாரை முதல்வராக நியமிக்கின்றார்களோ சட்டமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ அவர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. முதலமைச்சர் தனக்கு வேண்டிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறைகள் கொடுக்க வேண்டும் என்பதில் முழு அதிகாரம் முதல்வருக்கு தான் உள்ளது.

அதில் வேறு யாரும் தலையிடுவதற்கு எந்த வித அதிகாரமும் இல்லை என்று தான் சட்டம் சொல்கிறது. ஆனால் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நேற்று அதை திருப்பி இருப்பது வேதனையாக உள்ளது. அதனை அவர் தவிர்த்திருக்கலாம். காரணம் யார் யாருக்கு எந்த எந்த துறை கொடுக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். செந்தில் பாலாஜிக்கு ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியில் இருக்கிறார். அவருக்கு தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது வழக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒருவர் மீது வழக்கோ, அந்த வழக்கின் நிமித்தம் கைது அல்லது நீதிமன்ற காவல் போன்ற நிகழ்வுகள் இருந்தால் பதவியில் நீடிக்க கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.  பதவியில் நீடிக்க கூடாது என்று ஒருவர் தண்டனை பெற்றால் மட்டுமே  உண்டு.  எனவே முதல்வர் அவரை நீக்க உத்தரவு தெரிவிக்கவில்லை, அவரிடம் இருந்த துறையை இரண்டு அமைச்சர்களுக்கு பகிர்ந்து கொடுக்க  முழு உரிமை உண்டு.  அதனுடைய உரிமையில் தலையிடுவதை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தில் மத சார்பற்ற நாடு என இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகவே அவர் மத சார்புடைய நாடு என்று சொல்லி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பது  நியாயம் இல்லை. அதுமட்டுமின்றி தமிழக மக்களின் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக வெளி நாடுக்கு சென்று மூலதனங்களை  ஈர்ப்பதற்காக முதல்வர் சென்றால் அதை கூட ஜாடையாக அவரை கொச்சைப்படுத்துகின்றனர். இனிமேலாவது இதனையெல்லாம் ஆளுநர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது  அமைச்சரவையில் எந்த இலாகாவும் இல்லாமல் காலமானார் என்பது முன்னாள் முதல்வருக்கு தெரியும் என்று நம்புகிறேன். இதை நான் அரசியலுக்காக பேசவில்லை. ஜனநாயகத்தின் மாண்பை அனைவரும் மதிக்க வேண்டும். தமிழகத்தின் கோவிலாக இருக்க கூடியது சட்டமன்றமும், தலைமை செயலகமும். அதற்குள் அத்துமீறி நுழைந்து அமலாக்கத்துறை  ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் நோக்கோடு யாரையோ திருப்திபடுத்தும் விதமாக செயல்படுவது ஏற்புடையதல்ல. பாராளுமன்றத்திற்கு எவ்வளவு மாண்பு இருக்கிறதோ, இந்திய தலைமை செயலகத்திற்கு எவ்வளவு மாண்பு இருக்கின்றதோ அதை விட மிக அதிகமான மாண்பு சட்ட பேரவைக்கு, தலைமை  செயலகத்திற்கும் உள்ளது. எனவே ஆட்சியில் இருக்கின்றவர்கள் ஜன நாயக மாண்பையும், இந்திய  அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகிய அரசுகளுக்கு  இருக்கின்றது” என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
Embed widget