மேலும் அறிய

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜெகன் மேயராக தேர்வு செய்யப்பட்டவுடன், தினசரி ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டு வேலைகளை துரிதபடுத்தி வருகிறார்.

தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இலட்சமாக இருந்து உள்ளது.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

தூத்துக்குடி தொழில் வளம் மிகுந்த நகரம் ஆகும். இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்து இருந்தன. இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று குடிநீர் திட்டமும் மேம்படுத்தப்பட்டு 4-வது குடிநீர் குழாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனால் மாநகர மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பூங்காக்கள், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், 49 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், நடைபாதைகள், பொது கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

தூத்துக்குடி என்றாலே குறுகலான சாலைகள், போக்குவரத்து சிக்கல்கள், கழிவு நீரோடைகள், மழை வந்து விட்டால் வடியாத மழை நீர் வெள்ளமென குறைகளுக்கு பஞ்சமில்லாத மாநகராட்சி. அதிலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு நிலை ஆண்டுதோறும் தத்தளிக்கும் நிலை இருந்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் அமைக்கப்படாத நிலை என பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடும் நிலை இருந்து வருகிறது.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி பதவி வகுத்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நிலையை முற்றிலும் சீரமைக்க முடிவு செய்து களம் இறங்கி உள்ளார் மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆண்டுதோறும் அறிந்தவர் என்ற அடிப்படையில் அப்பகுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று கழிவு நீரோடை எங்கெல்லாம் தேவை உள்ளது , அவைகளை எவ்வாறு அமைப்பது , பக்கிள் ஓடையில் சென்றடையும் வகையில் அமைப்பது உள்ளிட்ட பணிகளை  மேயர் ஆய்வு செய்கிறார்.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

நகரின் பல்வேறு பகுதிகளிலும் தெரு விளக்குகளை அமைத்து உள்ளதால் தூத்துக்குடி நகரத்தில் வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. காலை முதல் மாலை வரை ஆய்வு செய்யும் மேயர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மூலம் செய்யப்பட்டு வரும் சாலைப்பணிகள், கழிவு நீரோடை சரியாக வாட்டமாக அமைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளும் அவர், சரியில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை கண்டிக்கவும் தவறுவதில்லை என்கின்றனர் ஒப்பந்ததாரர்கள்.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

மழைகால திண்டாட்டத்திற்கு இந்தாண்டாவது முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர் ஆண்டுதோறும் மழையினால் அல்லல்படும் பொதுமக்கள். இதுகுறித்து சி.பி.எம் நகர செயலாளர் ராஜாவிடம் கேட்டபோது, கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகள் அவசரகதியில் தங்களுடைய கமிஷனை கணக்கில் கொண்டே மக்களின் தேவையை அறியாமல் பணியை தொடங்கினர். ஒப்பந்தகாரர்கள் முறையாக பணிகளை செய்யாமல் ஏனோ தானோ என்று செயல்பட்டு வந்தனர்.

காலையில் செய்ய வேண்டிய பணிகள், மாலையில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு- அதிரடி காட்டும் தூத்துக்குடி மேயர்

பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜெகன் மேயராக தேர்வு செய்யப்பட்டவுடன், தினசரி ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டு வேலைகளை துரிதபடுத்தி வருகிறார். இதனால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேயர் தொடர் தலையீடு செய்து மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க செய்ய வேண்டுவதாக கூறும் இவர்,  மேயரின் பணி பாராட்டுக்குரியது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget