மேலும் அறிய

குமரியில் தொடர் மழை... குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தல்.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று  மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை வரை மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் வானத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அதன் பிறகு சாரல் மழை பெய்தது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக பெய்தது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், ஆணைக்கிடங்கு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 20.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

குமரியில் தொடர் மழை... குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
 
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
 
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை-20.6, பெருஞ்சாணி-4, சிற்றார்-2-19.2, பூதப்பாண்டி-1.4, குழித்துறை-4.4, மயிலாடி-2.8, நாகர்கோவில்-3, சுருளோடு-2.6, தக்கலை-8.4, பாலமோர்-16.8, மாம்பழத்துறையாறு-10, ஆரல்வாய்மொழி-1.2, கோழிப்போர்விளை-7.2, அடையாமடை-3, குருந்தன் கோடு-9, முள்ளங்கினாவிளை-12.2, ஆணைக்கிடங்கு-8.4.

குமரியில் தொடர் மழை... குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
 
வெள்ள அபாய எச்சரிக்கை!
 
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ளது. இந்த நிலையில் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.63 அடியாக உள்ளது. அணைக்கு 1129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 575 அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 791 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் இன்று மாலைக்குள் 70 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே 70 அடியை எட்டும் தருவாயில் உள்ளது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உயர்ந்துள்ளது.
 
குமரியில் தொடர் மழை... குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் முக்கிய ஆறுகளில் ஒன்றான தாமரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்

3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!

EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?

Jomel Warrican: வரலாறு! பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய வாரிகன்! 66 வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட் டைம்!

ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
EVA Solar Car: 80 பைசாவுக்கு 1 கிமீ பயணம், வெறும் ரூ.3 லட்சம் தொடக்க விலை - நாட்டின் முதல் சோலார் கார், அம்சங்கள் என்ன?
Jomel Warrican: வரலாறு! பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய வாரிகன்! 66 வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட் டைம்!
Jomel Warrican: வரலாறு! பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய வாரிகன்! 66 வருஷத்துல இதான் ஃபர்ஸ்ட் டைம்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!

இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை

Tamilnadu Roundup: குவியும் ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள், 13 அமாவசைகள், துக்ளக் அட்டாக் - தமிழ்நாட்டில் இதுவரை

Embed widget