கோவளம் கடற்கரை அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பீன் - கூட்டம் கூட்டமாக கூடிய டால்பீன்கள்
’’ஏதேனும் நிலஅதிர்வுகள், மீன்களின் வாழிடங்களில் அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருந்தலோ அல்லது தன் உடன் உள்ள மீன்களுக்கு ஆபத்து என்றாலோ மட்டுமே டால்பின் இன மீன்கள் கரை திரும்பும்'’
கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட டால்பின் மீன்கள் கடற்கரை அருகே கூட்டமாக வந்ததை கண்டு ஏராளமான மீனவ கிராம மக்கள் பார்வையிட்டு சென்றனர். கடலில் வாழும் மீன்கள் இனத்தில் டால்பின் வகை மீன்கள் அரிய வகையை சேர்ந்தது மட்டுமல்ல கடலில் எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகவே நீந்தி செல்லும். பாலூட்டி இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் மிருக இனத்தில் மிகவும் புத்திசாலியான மிருகம் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இதனை தொடர்ந்து கடற்கரையோரம் உள்ள கடல் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக தனது 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருச்சியில் 24 குரங்குகள், 12 நாய்கள் விஷம் வைத்து கொலை
இதனை காண கோவளம் பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவ மக்கள் அப்பகுதியில் குவிந்தனர் மேலும் இது தொடர்பாக வனதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் இந்த டால்பின் கூட்டம் அருகிலுள்ள அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், ஏழுசாட்டுப் பத்து, முகிலன் குடியிருப்பு கடல் கரை அருகே உள்ள பகுதிகளில் நீந்தி சென்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற பெரிய மீன்கள் கரைக்கு வருவது வழக்கமல்ல, ஏதேனும் நிலஅதிர்வுகள், மீன்களின் வாழிடங்களில் அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருந்தலோ அல்லது தன் உடன் உள்ள மீன்களுக்கு ஆபத்து என்றாலோ மட்டுமே டால்பின் இன மீன்கள் கரை திரும்பும் அந்தவகையில் இன்று ஒரு டால்பின் மீன் இறந்து கரை ஒதுங்கியதால் அது மீண்டும் கடலில் வந்து தங்களோடு சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட டால்பின் மீன்கள் கடற்கரையோரம் கூட்டமாகவே வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கோவையில் தேவாலயத்தின் மீது தாக்குதல் - செபஸ்தியார் சிலை சேதம்