கோயிலுக்கு செல்ல தடை விதித்தை கண்டித்து இந்து முன்னணி நூதன போராட்டம்...!
கோயிலின் வாசலில் நின்று கூட வழிபட முடியாத நிலையை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் வழிபாடுகள் நடத்தவும் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தடை விதித்தது தகுந்த முன்னேற்பாடுகள் மற்றும் முன்னறிவிப்புகள் இன்றி செயல்படுத்தப்பட்ட இந்த திடீர் தடையால் வெளியூர்களில் இருந்து சங்கரன்கோவில் வந்த பக்தர்கள் கோவில் வாசல் முன்பே தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தியும் தீபாராதனைகள் காட்டியும் வழிபட்டனர்.
கோயிலின் வாயிலில் கூட்டம் அதிகரித்ததால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோயில் நுழைவு வாயில் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் கோயிலின் வாசலில் நின்று கூட வழிபட முடியாத நிலையை கண்டித்து இந்து முன்னணியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் அம்மன் வேடமிட்டு, மாவிளக்கு ஏந்தியும் தீபாராதனை காட்டியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.