மேலும் அறிய

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காவலர் தற்கொலை முயற்சி.. வேதனையில் குடும்பத்தினர்

செய்திகள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பலர் விளையாடி வரும் நிலையில் பணத்தை இழந்து கடனாளியாக பலர் தற்கொலை செய்து கொள்ளும் செய்தியும் அவ்வப்போது வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செய்திகள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காவலர் தற்கொலை முயற்சி.. வேதனையில் குடும்பத்தினர்

இந்த சூழலில் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாடன் பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரவி செல்வன் (40). இவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்மி விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது, அதோடு  குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். இதனால் ரவி செல்வன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததோடு அக்கம் பக்கத்தினரிடம் லட்சக் கணக்கில் கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் ஈடுபாடு காட்டியதாக தெரிகிறது. இதனால் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த அவர் கடன் தொல்லையால் மிகுந்த விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுவில் விஷம் கலந்து குடித்த ரவி செல்வன் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். 

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காவலர் தற்கொலை முயற்சி.. வேதனையில் குடும்பத்தினர்

அப்போது அப்பகுதி வழியாக சென்றவர்கள் மயங்கிக் கிடந்த ரவி செல்வன் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர், இச்சம்பவம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து வரும் சூழலில் அவர்களது குடும்பங்களும் செய்வதறியாது திகைத்து நிற்கதியாய் நிற்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பலரது குடும்பங்களும் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்வதால் தமிழக அரசு உடனே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget