மேலும் அறிய

நெல்லை: குடிநீர் பிரச்சனை.. மக்களுடன் சென்று மேயரை சூழ்ந்து முறையிட்ட காங்கிரஸ் பெண் கவுன்சிலர்....

எங்கள் பகுதியில் பல வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்றாலும் அவர்களை பார்க்க முடியவில்லை.

நெல்லை மாநகராட்சி 53 வது வார்டுக்குட்பட்டது எழில் நகர் பகுதி.. இங்கு அமைந்துள்ள குடிநீர் தொட்டி மூலம் 53 மற்றும் 54 வது வார்டில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் அத்தொட்டியில் ஒரே ஒரு வால்வு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் 53வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சரிவர குடிநீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.. இதுகுறித்து அந்த வார்டை சேர்ந்த கவுன்சிலர் அம்பிகாவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர் அம்பிகா தலைமையில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமின்போது மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டு மனு அளித்தனர்.

நெல்லை: குடிநீர் பிரச்சனை.. மக்களுடன் சென்று மேயரை சூழ்ந்து முறையிட்ட காங்கிரஸ் பெண் கவுன்சிலர்....

அப்போது பேசிய கவுன்சிலர் அம்பிகா, எங்கள் பகுதியில் பல வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்றாலும் அவர்களை பார்க்க முடியவில்லை. நான் கவுன்சிலரான பிறகு தான் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர். எனவே தான் மக்களை உங்களிடம் அழைத்து வந்துள்ளேன். எனவே உடனே பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு மேயர் சரவணன் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நெல்லை: குடிநீர் பிரச்சனை.. மக்களுடன் சென்று மேயரை சூழ்ந்து முறையிட்ட காங்கிரஸ் பெண் கவுன்சிலர்....

தொடர்ந்து இது குறித்து கவுன்சிலர் அம்பிகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, “எங்கள் பகுதிக்கு வரக்கூடிய தண்ணீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை, இதனால் வாரத்தில் ஒரு நாள் தான் தண்ணீர் வருகிறது. மக்கள் ரொம்ப கஷ்டப்படுகின்றனர்.  அத்தியாவசிய தேவையான தண்ணீர் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று மனு அளிக்க வந்துள்ளேன்.  குறிப்பாக ரோஜா நகர், ராம்விலாஸ் நகர், உதயா நகர், நியூ காலனி, சரோன் நகர், ஐயப்பன் நகர் என  பல்வேறு பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. 400 வீடுகளுக்கு மேல் இருப்பதால் இரண்டு வால்வுகள் வைத்து தரும்படி முறையிட்டு வருகிறோம். அதேபோல குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும், குறைந்தபட்சம் அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாயை மாற்றி கொடுத்தால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.

எனவே இதை சரிசெய்ய மேயரிடம் பல முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். வார்டு குழு கூட்டத்திலும் இது குறித்து பேசி உள்ளேன். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மக்களோடு வந்து விட்டேன். அடுத்த கட்டமாக மக்கள் எல்லோரும் போராட்டத்தில் இறங்குவார்கள்” என்று தெரிவித்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் மக்களுடன் திரண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி மேயரிடம் முறையிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
Embed widget