மேலும் அறிய

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

தூத்துக்குடி- மதுரை இடையே 143.5 கி.மீ., தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தெற்கு ரயில்வேயின் முடிவு குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தூத்துக்குடி- மதுரை இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க ரயில்வே துறை முடிவு செய்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1999- 2000-ம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை வரை 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கி.மீ. தொலைவுக்கு ரூ.260 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து பாதையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி ரயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, இந்த திட்டத்தில் அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

இந்த நிலையில் தூத்துக்குடி- மதுரை புதிய ரயில் பாதை திட்டத்தை போதிய நிதி இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த முடிவுக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி- மதுரை இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது, தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தூத்துக்குடி- மதுரை இடையே 143.5 கி.மீ., தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தெற்கு ரயில்வேயின் முடிவு குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

மதுரைக்கு விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவு - தென்மாவட்ட மக்கள் அதிருப்தி

இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ரயில் இயக்க ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் கடந்த 13.07.2023-ல் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கடந்த 24.07.2023-ல் கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நிதி தேவையை காரணம் காட்டி பணிகளை நிறுத்தி வைக்கும் முடிவு, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மேலும் பல ஆண்டுகள் தாமதத்தை ஏற்படுத்தும். எனவே, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். மேலும், பணிகளை வேகப்படுத்தி இந்த திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget