மேலும் அறிய

பருத்தி ஆலை தீ விபத்து: ரூ.9.50 கோடி வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

”மேலும் மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்காக ரூ.3 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்காக ரூபாய் 50,000 யும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது”

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுரேந்திரராஜா என்பவருக்கு சொந்தமானது கவுஸ்துபா பருத்தி ஆலை. ஆலை வளாகத்திலேயே பருத்தி கிடங்கும் இணைந்து  உள்ளது. இந்த நிறுவனம் தனது ஆலை மற்றும் பருத்தி கிடங்குக்கு ராஜபாளையத்தில் இயங்கி வரும் "தேசிய காப்பீடு நிறுவனம்  ( National insurance co.ltd ) மூலம் "தீ மற்றும் சிறப்பு காப்பீட்டு கொள்கை" கீழ் காப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் கடந்த 19.12.2018 அன்று பருத்தி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து பருத்தி ஆலை நிறுவனம் சார்பாக நஷ்ட ஈடுக்கான காசோலை கேட்டதற்கு, காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை தாமதப்படுத்தி பின் அதனை நிராகரித்தது. அதற்கான காரணமாக கிடங்கின் இடம் காப்பீடு செய்யப்பட்ட பகுதியில் இல்லை என தெரிவித்தது. என்றாலும் முழு ஆலையும் ஒரே தபால் முகவரியுடன் தான் இருந்தது. பருத்திஆலை நிறுவனம் சார்பில், நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

பருத்தி ஆலை தரப்பில் கூறும் போது காப்பீட்டு நிறுவனம் ஆலையின் அமைப்பை நன்கு அறிந்திருந்தது மற்றும் ஆலையின் முழுமையான வளாகத்திற்கும் காப்பீடு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர். மேலும் காப்பீட்டு நிறுவனம் அநியாய வாணிப முறைகள் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கான நஷ்ட ஈடு, மனவேதனை மற்றும் சட்டச் செலவுகள் உள்பட மொத்தம் ரூ. 9.91 கோடி வட்டியுடன் இணைந்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நுகர்வோர் நாணயம், 19.12.2018 அன்று தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக ரூ. 9,50,63,985 /- ( 9 கோடியே, 50 லட்சத்தி, 63 ஆயிரத்து, 935 ரூபாய் ) தொகை 9 % வட்டியுடன், தீ விபத்து நிகழ்ந்த தேதி முதல் இந்த உத்தரவு வழங்கப்பட்ட 20.08.2024 வரை செலுத்த வேண்டும்.

மேலும் மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்காக ரூ.3 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்காக ரூபாய் 50,000யும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈடு தொகையை வட்டியுடன் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈட்டையும் வழக்குச் செலவு உத்தரவு நகலை பெற்று ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் செலுத்தப்பட வேண்டும்.  தவறினால் அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் ஆண்டுக்கு 6.5 வட்டி செலுத்த வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் உரிய இழப்பீட்டுத் தொகையாக கோடிக்கணக்கான ரூபாயை அளிப்பதற்கான தீர்ப்பை அளித்தது மட்டுமின்றி மனுதாரரின் மன உளைச்சலுக்கும், வழக்கு செலவிற்கும் சேர்த்து நஷ்டஈட்டை காப்பீட்டு நிறுவனம் தர கூறி இருப்பது நுகர்வோர்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget