மேலும் அறிய
Advertisement
செஷல்ஸ் தீவில் சிறையில் உள்ள கன்னியாகுமரி மீனவர்களிடம் கடலோர காவல் படை விசாரணை
செஷல்ஸ்தீவில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதி 3 விசைப்படகுகளில் குமரி மாவட்ட மீனவர்கள் 21 பேர் உள்பட 33 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 7ஆம் தேதி செஷல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 33 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இதை போல் அந்தமான் தீவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கொச்சி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற தூத்தூர், பூத்துறையைச் சேர்ந்த 25 மீனவர்கள் செஷல்ஸ்தீவு எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். தற்போது செஷல்ஸ்தீவில் 58 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஷல்ஸ்தீவில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகளும், மீனவ பிரதிநிதி களும் வலியுறுத்தி வருகிறார்கள். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவ குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பி உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion