மேலும் அறிய
Advertisement
கருணாநிதி சிலையை திறக்க முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார் - மேயர் தகவல்
முதல்வர் வரும்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் இனிவரும் 5 ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவை என்பதை பட்டியலிட்டு கோரிக்கையாக வைத்து அந்த நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, செல்வக் குமார், ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன், டி .ஆர். செல்வம், மேரி ஜெனட்விஜிலா, உதயகுமார்,சேகர், ரமேஷ், பால்அகியா, நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது;- நாகர்கோவில் மாநகராட்சியுடன் தேரூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டது. தற்பொழுது அந்த பகுதிகளின் குடிநீர் கட்டணமாக ரூ.135 வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்டணமாக ரூ.55 மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைத்த பிறகு குடிநீர் கட்டணத்தை குறைக்கவில்லை. ஆனால் வரி உயர்வை மட்டும் உடனடியாக அமல்படுத்தியுள்ளனர்.எனவே குடிநீர் கட்டணத்தையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. பலமுறை அதிகாரிகள் தொடர்பு கொண்ட பிறகும் மின்விளக்குகள் சரி செய்யப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி 51- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அங்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து மேயர் மகேஷ் கூறியதாவது;- ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது நாகர்கோவில் நகருக்கு ரூ. 251 கோடி செலவில் புத்தன்அணை திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்தை செயல்படுத்தப்படும்போது அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்யப்படும். தற்பொழுது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இது தொடர்பாக பரிசீலித்து ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மின் விளக்குகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அனுமதி இல்லாத இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் மின் விளக்கு வழங்க இயலாது.அந்த இடங்கள் அனுமதி பெற்ற பிறகு மின் விளக்குகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.15 கோடி வரி வசூல் அதிகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்பொழுது ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 52 வார்டுகளிலும் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் என்னென்ன பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் பாராபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காகவும் மாவட்டத்தில் முதல் முறையாக நிறுவப்பட உள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் வரும்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் இனிவரும் ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவை என்பதை பட்டியலிட்டு அவர்களிடம் கோரிக்கையாக வைத்து அந்த நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொருட்காட்சி மைதானத்தில் இருந்த மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.22 லட்சம் செலவாகி உள்ளது. அங்கிருந்த மணலை விற்பனை செய்வதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள மேயர் மகேசுக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், த.மா.கா., மதிமுக கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion