மேலும் அறிய

கன்னியாகுமரியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு

’’சுமார் 3 மணி நேர சுற்றுப்பயணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வது ஏற்புடையதாக இல்லை - கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் கருத்து’’

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகள், குடியிருப்பு பகுதிகள், விவசாயநிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய மத்திய அரசின் சிறப்பு குழு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய நிதித்துறை ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.பி.கவுல், மத்திய நீர்வள ஆராய்ச்சி இயக்குநர் தங்கமணி, மத்திய எரிசக்திதுறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் அடங்கிய மத்திய குழு முதலில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில்  வைக்கப்பட்டு இருந்த மழைச்சேதம்  குறித்த புகைப்படங்களை காட்சி படுத்திருந்த கண்காட்சியை பார்த்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.


கன்னியாகுமரியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு

இதனை தொடர்ந்து வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள பிள்ளைபெத்தான் அணைக்கட்டு, நுள்ளிவிளை மற்றும் குமாரகோவில்  சானல் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு, வைக்கலூர், பார்த்திப புரம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள பாதிப்பு என 10 இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்திடம் கேட்ட போது குமரி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என்பது மிகவும் கொடுமையான ஒன்று ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர் இதேபோல் பல சாலைகள் துண்டிக்கப்பட்டது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வயல்வெளிகளிலும் விவசாய நிலங்களையும் சூழ்ந்ததால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படியான ஒரு பேரிடரை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு நாள் ஆவது மத்திய குழுவிற்கு தேவைப்படும் ஆனால் சுமார் 3 மணி நேர சுற்றுப்பயணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வது ஏற்புடையதாக இல்லை இது குறித்து ஆய்விற்கு வந்த மத்திய குழுவிடம் நான் கேட்டபோது நாங்கள் செல்லும் பகுதி அனைத்தும் ஒரு சாம்பிள் போன்றது என்றும் அதிகாரிகளிடம் இருந்து முழு தகவல்களும் பெற்று ஆய்வறிக்கையில் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்தனர் என விஜய் வசந்த் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget