மேலும் அறிய

Selvaperunthagai: வெற்று காகிதம்! ஆட்சியை தக்கவைக்க போடப்பட்ட பட்ஜெட்- செல்வபெருந்தகை விமர்சனம்

"நேரடியாகவும், மறைமுகமாகவும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி வரை நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்"

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிர் நீத்தனர். அதன் 25வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வ பெருந்தகை  கூறும்பொழுது, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் நினைவு கூறும் வகையில் அரசு சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்க வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் காங்கிரஸ் கமிட்டி நிற்கிறது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கை ஆந்திரா, பீகார் ஆகிய  இரண்டு மாநிலங்களுக்காக மட்டுமே போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவிற்கானதாக இல்லை.

10 முறைக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை இந்த நிதிநிலை அறிக்கையில் திரும்பி பார்க்கவில்லை. தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ் பற்றியோ ஒருமுறை கூட நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் பேசவில்லை. வெள்ள நிவாரண தடுப்பு பணிக்காக ஒதுக்கபட்ட நிதி பெருமளவு பாஜக ஆளும் மாநிலங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை.

Selvaperunthagai: வெற்று காகிதம்! ஆட்சியை தக்கவைக்க போடப்பட்ட பட்ஜெட்- செல்வபெருந்தகை விமர்சனம்

அமைச்சரவையை தக்க வைக்கவே நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அதிகார ஆயிலை நீட்டிக்கவும், ஆட்சியை தக்க வைக்கவும் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.  இது வெற்று காகிதம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கொஞ்சம் காப்பி அடித்து நிதிநிலை அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாகவும், மறைமுகமாகவும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி வரை நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். பாசிச சக்திகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget