மார்ச் 4 ஆம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 11.03.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போல் முன்னதாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2023 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அய்யா வைகுண்ட சாமி 191 வது பிறந்த நாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி 04.03.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும் 04.03.2023 அன்று வேலை நாளாக இருந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 11.03.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

