மேலும் அறிய
Advertisement
அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் கோயில் கட்ட முயற்சி - கன்னியாகுமரி ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதன் மூலம் ஏழை குழந்தைகள் பயன்பெற முடியும் என நீதிபதிகள் கருத்து
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதில், "கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு, அண்ணாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில் 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு. இப்பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள சிலர் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏழை குழந்தைகள் படிப்பதற்காக அங்கன்வாடி கட்டிடம் கட்டினால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், முறையான அனுமதி இல்லாமல் இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்டிடம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, விநாயகர் கோயிலுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு அப்பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், என்ன கட்டிடம் கட்டப்பட்டுள்ளது? யாருடைய இடம்? கட்டிடம் கட்டுவதற்கு யார் அனுமதி அளித்தது? தற்போது இடத்தின் நிலை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி. அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதன் மூலம் ஏழை குழந்தைகள் பயன்பெற முடியும். என கருத்து தெரிவித்தனர்.
மேலும் மனுதாரர் தரப்பில் 2011ன் படி அப்பகுதியில் மக்கள் தொகை எவ்வளவு உள்ளனர்? வறுமைக்கோட்டிற்கு கீழ் எவ்வளவு மக்கள் உள்ளனர்? மற்றும் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர்? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion