மேலும் அறிய

சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது,  தொடர்ந்து  இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். காதல் ஜோடிகளுக்கு நேற்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனை அறிந்த பெண் வீட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த போது  ரகளை ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த பெண் வீட்டாருடன் அப்பெண் வர மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட முயன்ற நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு உள்ளிட்ட அனைத்தையும் சூரையாடியதுடன் அடித்து நொறுக்கி  ரகளை ஈடுபட்டுள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!

இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருள், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழனி உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா சம்பவ இடத்திற்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.. மேலும் இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்  நடைபெற்ற நிலையில் பெண் வீட்டை சேர்ந்தவர்கள் கும்பலாக அலுவலகத்திற்கும்  நுழைந்து அங்குள்ள பொருட்களை சூரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget