Local body election |பதட்டமான இடங்களில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் நியமனம் - நெல்லை போலிஸ் கமிஷனர் துரைகுமார்
”அமைதியான முறையிலேயே பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது, பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியபட்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - நெல்லை போலிஸ் கமிஷனர்”
நெல்லை மாநகர காவல் துறைக்கு தமிழக அரசால் புதிதாக 8 நான்கு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரைகுமார் காவல்துறை ஆணையர் வளாகத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்து ரோந்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையாளர் துரைகுமார் கூறும் பொழுது,
நெல்லை மாநகருக்கு 8 ரோந்து வாகனங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு உள்ளது, இன்று முதல் இந்த வாகனங்கள் பணியை துவக்குகிறது, ஏற்கனவே 8 பெட்ரோல் வாகனங்கள் பணியில் உள்ளது, தற்போது வழங்கப்பட்டு உள்ள வாகனத்தையும் சேர்த்து நெல்லை மாநகர காவல்துறையில் மொத்தம் 16 வாகனங்கள் ரோந்து பணியில் இருக்கும். அதிகபடியான ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தும் போது அவசர அழைப்புகளுக்கு உடனுக்குடன் சம்பந்தபட்ட இடத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொள்ளமுடியும், நெல்லை மாநகர காவல்துறையின் பணி சிறப்படைய இது மேலும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார். நெல்லை மாநகராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது. பிரச்சாரங்கள் தேர்தல் ஆணைய விதிகளின் படி நடைபெறுகிறாதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அமைதியான முறையிலேயே பிரச்சாரங்களும் நடைபெற்று வருகிறது, பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியபட்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகரத்தின் எல்கைகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களை கண்டறிந்து அதிக கவனம் செலுத்தி அந்தபகுதிகளில் கூடுதல் ரோந்து பணியில் போலீஸார் ஈடுபடுகிறார்கள். மேலும் பதட்டமான பகுதிகளில் கூடுதல் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறை மீறல்கள் இருந்தால் உடனுக்குடன் பறக்கும் படைக்கு தகவல் வழங்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சியில் 160 பகுதிகளில் மொத்தம் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 20 வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்பட்டு மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று மண்டல அளவில் நியமிக்கப்பட உள்ள தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் வாக்குச்சாவடிகள் அமைவிடம், வாக்குச்சாவடி பெயர் போன்றவை குறித்த தகவல்களை வாக்காளர்கள் தெரியும் வகையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது, பறக்கும் படை மாநகராட்சியில் 4 குழுவும், 3 நகராட்சியில் 3 குழுவுமாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளுக்கென 10 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 131 பதட்டமான வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக நெல்லையில் 274 வாக்கு சாவடிகள் பதட்டமானதாக கண்டறியபட்டுள்ளது. 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1600 பேர் புறநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1168 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்