மேலும் அறிய

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

மாவட்டத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டு கட்டிட தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது - தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி

நெல்லை டவுண்  பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய வருவாய் துறை, பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளடக்கிய 18 சிறப்பு குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டது. இதில் விபத்து ஏற்பட்ட இடம் சரிந்து விழுந்த சுவர் மற்றும் கழிப்பறையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், சமையலறை,  பள்ளி சுற்றுச் சுவர் உள்ளிட்ட பகுதிகளும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் சுற்றுச்சுவர் சமையலறை வகுப்பறை கழிப்பறை போன்ற கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு,  அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில்  சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நெல்லை வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும்  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் ஆய்வு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் படி குறைபாடுகள் உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சுட்டிக்காட்டும் குறைகளை சரிசெய்ய தவறும் பள்ளிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

முன்னதாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டமான  "இன்னுயிர் காப்போம்" திட்டத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 9 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளுக்கான கடவுச்சொல்லை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  மேலும் நிகழ்வில் 3 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது. 

நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும் பொழுது, தமிழகத்தின் எல்லைப் பகுதியில் விபத்து ஏற்பட்டால் உலகத்தில் எந்த பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பள்ளி விபத்து துரதிர்ஷ்டவசமானது,  உயிரிழந்த பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் 17 குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய பிரித்து அனுப்பபட்டுள்ளனர். இந்த குழுக்கள் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யும். அதனை தொடர்ந்து அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகளின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை சரி செய்ய தவறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி விபத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
IPL RCB vs KKR: டாஸ் வென்றார் ரஜத் படிதார்! பெங்களூருக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்குமா கொல்கத்தா?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
Fact Check: சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் காணொளி.. ஆனா, இது அது இல்ல!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Embed widget