மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி : அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர்.... மாணவிகள் எடுத்த அதிரடி முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அக்கவுண்டன்சி ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில்,கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து வாக்கு வாதம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர். இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகைளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion