மேலும் அறிய

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

ஆர்.எஸ்.மங்கலத்தில் முதியவர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் முதியவர் ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செட்டிய மடையை சேர்ந்தவர் சந்தியாகு (எ) சந்திரசேகர். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானசவுந்தரி (வயது80). இவர்களது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பாடு வாங்குவதற்காக ஆர்.எஸ்.மங்கலம் டவுண் பகுதிக்கு சந்தியாகு சென்றுள்ளார். இதனால் ஞானசவுந்தரி தனியாக வீட்டில் இருந்துள்ளார். சாப்பாடு வாங்கி விட்டு சந்தியாகு வீட்டுக்கு திரும்பி வந்தபோது ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததாக ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

ஞானசவுந்தரி தலையின் பின்பக்கம் காயம் இருப்பதால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. இதனால் கொலையாளி கொலை நடந்த இடத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்சில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தபின் ஞானசவுந்தரியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஞானசவுந்தரியின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விசாரணையின் போது சந்தியாகு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓட்டலில் வேலைசெய்து வந்த ஒரு நபரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் ஊருக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

இதனால் அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது கணவரே மனைவியை அடித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

மேலும், மோப்ப நாய் சோதனையில் சம்பவ இடத்தில் இருந்து ஓடி கடைசியாக ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து கணவர் சந்திரசேகரையே  சுற்றி சுற்றி வந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஞானசவுந்தரியின் பிரேத பரிசோதனையில் தலையில் அடித்து கீழே தள்ளி அதன் பின் கழுத்து நெரித்து காெலை செய்த விவரம் தெரிய வந்தது. மேலும்  தடயங்கள், கைரேகை ஆகியவற்றை வைத்து விசாரித்ததில் கணவரே தனது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியது.

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

பின்னர் போலீசார் முறையாக  நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறியுள்ளார். அதில் சந்திரசேகர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு செய்தபிறகு தனக்கு கிடைத்த ஓய்வூதிய தொகையை வைத்துக் கொண்டு விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போலவும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்  சான்றிதழ் வாங்கி கொடுப்பது போலவும்  அவர்களை அணுகி மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி தவறான உறவு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீராத விளையாட்டு தாத்தா... லீலைகளின் மன்மதன்...! மனைவியை கொலை செய்து நாடகமாடியது அம்பலம்...

இவர் பல பெண்களுக்கு பணத்தை செலவு செய்து வந்ததை  அவரது மனைவி தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரம் அடைத்த சந்திரசேகர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து திருப்பி பின்தலையில் அடித்து காயப்படுத்தி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கடந்த மூன்று  நாட்களாக யார் கொலை செய்தார்கள் என்று தெரியாத நிலையில் பரபரப்பாக இருந்து வந்த சூழ்நிலையில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு  நாடகமாடியது தெரியவந்தது.  இதனையடுத்து தற்போது தீராத விளையாட்டு தாத்தா  சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget