மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி அருகே ஆட்டோவில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது ஒருவர் தலைமறைவு
சோதனை செய்தபோது அவர்கள் 6 கிலோ கஞ்சாவை ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் நரி குளம் பகுதியில் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர் அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்த முயன்றபோது ஆட்டோ நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அதனை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அதில் சோதனை செய்தபோது அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் 6 கிலோ கஞ்சாவை ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை கைப்பற்றிய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கடத்தல் காரர்களுக்கு ஆதரவாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடடதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி ஆட்டோவில் இருந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது .
இதனை தொடர்ந்து உஷாரான போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பியுள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக கொட்டாரம் பகுதியை சேர்ந்த மெர்லின் மோசஸ் (20) , மந்தனம்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ் (20) மற்றும் செல்வன் புதூரை சேர்ந்த ஜெனிஸ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, அரிவாள், 6 கிலோ கஞ்சா , ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை காவல் நிலையம் கொண்டு வந்தனர் மேலும் தப்பி ஓடிய அஜீத் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion