மேலும் அறிய

'எங்கட நாட்டில் ஒண்டும் இல்ல, அங்க இருக்க இயலாது' - அகதிகளாக தனுஷ்கோடி வந்த 18 இலங்கை தமிழர்கள்.!

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் எண்ணிக்கை

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடமாக வந்துள்ளனர். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், தனி நபர் ஒருவருமாக 18 பேர் வந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏற்கனவே 42 பேர் இலங்கையிலிருந்து படகுமூலம் தமிழகம் வந்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கட நாட்டில் ஒண்டும் இல்ல, அங்க இருக்க  இயலாது' -  அகதிகளாக தனுஷ்கோடி வந்த 18 இலங்கை தமிழர்கள்.!

இன்று வந்த 18 பேர்களில் இரண்டு படகுகளில் 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர்  தனுஷ்கோடி கடல் பகுதியிலும், மற்றும்  ஒரு படகில் 5 பேர் தனியாக ஒரு குழுவாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடல் படகுயிலும் வந்து இறங்கியிருக்கிறார்கள். இவர்களை  கடலோர காவல் குழுமம் மற்றும் கியூ பிராஞ்ச்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு வழி இன்றி வேலைவாய்ப்பை இழந்து  ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால்,   இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக  மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வீதியில் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்கட நாட்டில் ஒண்டும் இல்ல, அங்க இருக்க  இயலாது' -  அகதிகளாக தனுஷ்கோடி வந்த 18 இலங்கை தமிழர்கள்.!

1948 இல் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில்  இலங்கை சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்‌ஷே பதவி விலகக் கோரி பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது, கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தன்னிச்சையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   கோபமடைந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் டயர்களை எரித்து தலைநகருக்குச் செல்லும் முக்கிய சாலையையும் ரயில்களையும்  மறித்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  இலங்கை அரசுக்கு எதிராக,  ரம்புக்கனா என்ற இடத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது இலங்கை போலீசார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எங்கட நாட்டில் ஒண்டும் இல்ல, அங்க இருக்க  இயலாது' -  அகதிகளாக தனுஷ்கோடி வந்த 18 இலங்கை தமிழர்கள்.!

இதனால், உணவுப்பஞ்சம் ஒரு பக்கம், உயிர் மீது கொண்ட அச்சம் என, ஒவ்வொரு நாளும் பசியும் பட்டினியுமாக வாழ வழியின்றி , இந்தியாவுக்கு சென்றால் உயிர் பயமுமின்றி மூன்று வேளையும் உணவு உண்டு   பாதுகாப்பாக வாழலாம் என்ற நம்பிக்கையில், இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு  வரத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் யுத்தகாலத்தில் இந்தியாவிற்கு அடைக்கலமாக வந்த தற்போது பஞ்சம் பசி தீர்க்க  முதன் முதலாக, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத்தொடங்கினர்.  இதில் ஏற்கனவே 11 குடும்பத்தை சேர்ந்த 42 ஈழத் தமிழர்கள் அகதிகளாக இலங்கையில் வாழ வழியின்றி தமிழகத்து வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நள்ளிரவில் 2 படகுகளில்   கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 நபர்கள் ஒரு குழுவாகவும், மற்றுமொரு படகில் 5 பேர் ஒரு குழுவாகவும்,  இன்று ஒரே நாளில் மட்டும்  மொத்தம் 18 பேர் உயிரை பணயம் வைத்து  ஆபத்தான முறையில் கடல் கடந்து வந்து  தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக வந்து  தஞ்சம் அடைந்துள்ளனர்.

எங்கட நாட்டில் ஒண்டும் இல்ல, அங்க இருக்க  இயலாது' -  அகதிகளாக தனுஷ்கோடி வந்த 18 இலங்கை தமிழர்கள்.!

மன்னாரை சேர்ந்த பிரதீப்  கூறுகையில், "எங்கட நாட்டில் ஒன்டுமில்லை, விலைவாசி எல்லாம் ஏறி போச்சு' பச்சை கொழந்தைங்களுக்கு கூட பால்மா (பால்  பவுடர்) கிடைக்க இல்ல, ரொம்ப கஷ்டமா இருக்கு இனி அங்க இருக்க இயலாது அதான் நாங்க இங்க வந்து சேர்வதற்கு கஷ்டமா இருந்தாலும் உயிரை பணயம் வச்சு,  இந்தியாவுக்கு போனா பிழச்சு கொள்ளலாம் எண்டு வாரோம்"  என்று கூறினார். இவர்கள் வந்த தகவல் அறிந்த  கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச்  போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பதினெட்டு பேரையும் அழைத்துக்கொண்டு விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னர் அகதிகளாக வந்தவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க  வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?
Embed widget