Tata Sierra vs Hyundai Creta: க்ரேட்டாவை விட பெரிய காரா சியாரா? விலை, அம்சங்களில் சம்பவம் செய்த டாடா - பெஸ்ட் எஸ்யுவி?
Tata Sierra vs Hyundai Creta: இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய காம்பேக்ட் எஸ்யுவிக்களான டாடா சியாரா மற்றும் ஹுண்டாய் க்ரேட்டாவில் எது சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Sierra vs Hyundai Creta: பெரிய காம்பேக்ட் எஸ்யுவிக்களான டாடா சியாரா மற்றும் ஹுண்டாய் க்ரேட்டாவின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா சியாரா Vs ஹுண்டாய் க்ரேட்டா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன சியாரா சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் வெறும் ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் முழு விலைப்பட்டியலானது டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டாவிற்கு, சியாரா நேரடியாக கடும் போட்டி அளிக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து க்ரேட்டா மற்றும் சியாராவின் பல்வேறு ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சியாரா Vs க்ரேட்டா: பரிமாணங்கள்
| பரிமாணங்கள் | டாடா சியரா | ஹூண்டாய் க்ரேட்டா |
| நீளம் | 4340 மி.மீ. | 4330 மி.மீ. |
| அகலம் | 1841 மி.மீ. | 1790 மி.மீ. |
| உயரம் | 1715 மி.மீ. | 1635 மி.மீ. |
| வீல்பேஸ் | 2730 மி.மீ. | 2610 மி.மீ. |
| க்ரவுண்ட் க்ளியரன்ஸ் | 205 மி.மீ. | 190 மி.மீ. |
| பூட் ஸ்பேஸ் | 622 லிட்டர் | 433 லிட்டர் |
| ஃப்ரண்ட் ஓவர்ஹேங் | 802 மி.மீ. | 840 மி.மீ. |
| பின்புற ஓவர்ஹாங் | 808 மி.மீ. | 850 மி.மீ. |
| அப்ரோச் ஏங்கில் | 21.8 டிகிரி | 19.1 டிகிரி |
| ரேம்ப் ஓவர் ஏங்கில் | 22.8 டிகிரி | 23.3 டிகிரி |
| டிபார்ட்சுர் ஏங்கில் | 30.6 டிகிரி | 28.1 டிகிரி |
| டர்னிங் டயாமீட்டர் | 30.6 மீ | 10.65 மீ |
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நீளத்தில் சியாராவின் நீளம் 10 மில்லி மீட்டர் அதிகமாகவும், வீல்பேஸ் அடிப்படையில் 120 மில்லி மீட்டர் அதிகமாகவும் கொண்டுள்ளது. இதனால் அளவீடுகளின்படி சியாரா சற்றே பெரிதாக தெரிகிறது.
சியாரா Vs க்ரேட்டா: பவர்ட்ரெயின்
க்ரேட்டாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. இது 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் உடன் 160bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆப்ஷன் ஆனது கண்டினீயூஸ்லி வேரியபள் ஆட்டோமோடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டு 115bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. க்ரேட்டாவின் என் லைன் எடிஷனானது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.
மறுமுனையில் சியாராவில் உள்ள 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது மேனுவல் மற்றும் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டு 106bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 1.5 லிட்டர் டர்போ இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆனது 160bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டு 115bhp ஆற்றலை வழங்குகிறது.
சியாரா Vs க்ரேட்டா: கூடுதல் அம்சங்கள்?
க்ரேட்டா மற்றும் சியாரா என இரண்டு எஸ்யுவிக்களிலும் அதிகப்படியான அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ADAS, ரியர் சன்ப்ளைண்ட்ஸ், எலெக்ட்ரிக் பார்கிங் ப்ரேக் மற்றும் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. சியாராவில் முன்புற பயணிக்கு கூடுதலாக ஒரு ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. நல்ல ஆடியோ அனுபவத்திற்கான சவுண்ட் பார்/டால்பி அட்மாஸ், பெரிய டிஸ்பிளே மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்களிலுமே வெண்டிலேடட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் சியாராவில் நீட்டிக்கப்பட்ட கால்ஃப் சப்போர்ட் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ப்ளஸ் கார்பிளே வசதியை கொண்டுள்ளது. இரண்டு கார்களுமே இன் - பில்ட் ஆப்களை கொண்டுள்ள நிலையில் சியாரா ஓவர் தி ஏர் அப்டேட்களை பெறுகிறது.
சியாரா Vs க்ரேட்டா: எந்த கார் மலிவானது?
ஹுண்டாய் க்ரேட்டாவின் தொடக்க விலையானது 10.7 லட்சம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) ஆக இருக்க, டாப் வேரியண்டின் விலை ரூ.20 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், சியாராவின் தொடக்க விலை ரூ.11.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அம்சங்கள் மற்றும் நவீன வசதிகளை கருத்தில் கொண்டால் இந்த விலை நியாயமானதாக தெரிகிறது. இதனால் போட்டித்தன்மை மிக்க காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் க்ரேட்டாவிற்கு சரியான போட்டியாக சியாரா திகழும் என நம்பப்படுகிறது. இந்த போட்டியின் கள நிலவரத்தை அடுத்த வருடத்தில் சியாரா சாலை பயன்பாட்டிற்கு வந்தபிறகே அறிய முடியும்.





















