மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி : அழகாய் பொரிந்து வெளியில் வந்த 126 ஆமை குஞ்சுகள்.. ஆட்சியர் முன்னிலையில் கடலில் விடப்பட்டன
சுமார் 126 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். இவ்வருடம் மட்டும் 5993 ஆமை முட்டைகள் பாதுகாத்து வரும் நிலையில் இதுவரை 1317 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் துவாரகாபதி கடற்கரையில் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இருந்து வெளியே வந்த 126 ஆமை குஞ்சுகள் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் கடலில் விடப்பட்டன. ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும்.இந்த ஆமைகள் இதய வடிவம் கொண்டு ஒலிவ பச்சை நிறத்தில் இருப்பதால் ஒலிவ நிறச் சிற்றாமை என்று பெயர் பெற்றன.
பெண் ஆமைகளை நவம்பர் - ஏப்ரல் வரை முட்டையிட ஏற்ற காலமாகும். சிற்றாமைகள் அதிக அளவில் கடற்கரைகளில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்குக் கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் பெரிய எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சிற்றாமைகள் தமிழகம், புதுச்சே ரி, ஆந்திர கடலோரப் பகுதியைக் கடந்து செல்கின்றன.ஒவ்வொரு பெண் ஆமையும் ஆண்டுக்கு இரண்டு முறை முட்டை இடும். ஒரு முறைக்கு 50 முதல் 190 முட்டைகள்வரை இடலாம். முட்டையிட்ட 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொரிந்துவிடும். முட்டைகள் பெரும்பாலும் இரவிலேயே பொரிகின்றன. பொரிந்ததும் வெளிவரும் குஞ்சுகள் தன்னியல்பாகவே கடலை சென்றடையும் .
பெண் ஆமைக் குஞ்சுகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கு வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிட வருகின்றன. இவை பிறந்து சுமார் 20-25 ஆண்டுகள் கடந்த பின்னர் கருத்தரிக்கும் பெண் ஆமைகள் இவை பிறந்த இடத்தின்கே மீண்டும் முட்டையிட வருவது மிகுந்த ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றால் இடப்படும் 1,000 முட்டைகளில், ஒன்று மட்டும் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் செயல்படும் அரசு ஆமை முட்டை பொரிப்பகங்களில் இருந்து முட்டைகளை பொரிந்து வருகிறது.
குறிப்பாக முகிலன் குடியிருப்பு, மணக்குடி ஆகிய கடல் பகுதிகளில் ஆமைகள் அதிக அளவு உள்ளது. கடந்த 3 மாதத்திற்கு மேலாக கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற ஏராளமான முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு கன்னியாகுமரி துவாரகா பதி கடற்கரை பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரையில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்தன.
அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 126 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். இவ்வருடம் மட்டும் 5993 ஆமை முட்டைகள் பாதுகாத்து வரும் நிலையில் இதுவரை 1317 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion