மேலும் அறிய

பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா; மேயரின் அசத்தல் அறிவிப்பால் லேடீஸ் ஹேப்பி

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடு இருப்பதாக மக்கள் அச்சம். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனை நடத்த வேண்டும்-மாமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்.

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சில் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர்.

பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா; மேயரின் அசத்தல் அறிவிப்பால் லேடீஸ் ஹேப்பி

அப்போது, தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடு இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனை நடத்த வேண்டும். பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்க வேண்டும். டி.எம்.பி காலனியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு நிரந்தர டாக்டர் இல்லை. ஆகையால் நிரந்தரமாக டாக்டர், நர்சு நியமிக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள பூங்கா அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும். சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மீன்கடைகள் உள்ளன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேறு இடத்தில் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

                                                                                                     குடிநீர்

பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா; மேயரின் அசத்தல் அறிவிப்பால் லேடீஸ் ஹேப்பி

கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது,  “தூத்துக்குடி மாநகராட்சி, தமிழகத்தில் 2-வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு வழங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாநகராட்சியில் முதல் கட்டமாக 6 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும். மற்ற வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும். மண்டலம் வாரியாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் வரக்கூடிய மனுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் குறைகள் தீர்ந்து உள்ளது. தற்போது சாலை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செய்து வருகிறோம்.

                                                                                     ஜீரோ பிரச்சினை

பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா; மேயரின் அசத்தல் அறிவிப்பால் லேடீஸ் ஹேப்பி

மாநகராட்சி பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு அடையாள குறியீடு வழங்கப்பட உள்ளது. அதில் வரிவிதிப்பு எண் எழுதப்பட்டு இருக்கும். இதனால் நாயின் உரிமையாளரை உடனடியாக அடையாளம் காண முடியும். அடையாள குறியீடு பெறாத நாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு வ.உ.சி. கல்லூரி அருகே அமைக்கப்பட உள்ள கால்நடைகள் பாதுகாப்பு மையத்தில் விடப்படும். சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பாலித்தீன் பைகள் உபயோகத்தை தடுக்க கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் 153 பூங்காக்கள் உள்ளன. இந்த சீரமைக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்காக ஒரு பூங்கா

பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு சங்கங்கள் மூலம் கோரிக்கை விடுத்தால், மாநகராட்சி இடத்தில் அதற்கான மைதானம் அமைத்து ஒப்படைக்கப்படும். புதிய குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு உள்ளது. மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் ஜீரோ ஆக்கிவிடுவோம். சாலைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தோண்டக்கூடாது. சாலைகளை சேதப்படுத்தி இருந்தால், அதில் சிமெண்ட் கொண்டு சரி செய்ய வேண்டும். மீன் கடைகளை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டால் கடைகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும்” என்றார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget