மேலும் அறிய

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

தற்போது பணிகள் 78 விழுக்காடு முடிவடைந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகள் உட்பட ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில்  குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி,ஆட்சியர் லட்சுமிபதி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச்சாக்கடை திட்டத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 120.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2, 3, 21,18,19, 33, 34,35 ஆகிய 8 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் குறித்தும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 152.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 16, 17, 26, 49, 50 ஆகிய 5 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 1387.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 1331 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூபாய் 605.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 831 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில்  குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

அதுமட்டுமல்லாமல், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தற்போது செயல்பட்டுவரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும். மேலும் நடைபெற்றுவரும் குடிநீர் தொடர்பான திட்டப்பணிகள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள காலஅளவிற்குள் விரைவாக நிறைவுசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில்  குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச்சாக்கடை திட்டத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 120.53 கோடி மதிப்பீட்டில் 2, 3, 21,18,19, 33, 34, 35 ஆகிய 8 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 3வது வார்டுக்குட்பட்ட கே.டி.சி. நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 152.14 கோடி மதிப்பீட்டில் 16, 17, 26, 49, 50 ஆகிய 5 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 17வது வார்டுக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில்  குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும்?

பின்னர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 16.57 மில்லியன் லிட்டர் குடிநீரை தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஒன்றியம் அகரம் ஊராட்சியைச் சார்ந்த அகரம் கிராமத்திற்கு அருகில் நீர் எடுக்கும் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் 239 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் 20.35 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மணியாச்சியில் அமைந்துள்ள தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது.

இவ்விரண்டு உயர்மட்ட நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்து 42 ஊராட்சி தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலிருந்து 60 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும், மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 356 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 92,407 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 31.03.2023-ல் வழங்கப்பட்டு தற்போது பணிகள் 78 விழுக்காடு முடிவடைந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இத்திட்டம் வருகின்ற அக்டோபர் 2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பொழுது 3,96,376 மக்கள் பயன் அடைவார்கள் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ரா.ஐஸ்வர்யா, தலைமைப் பொறியாளர் வி.ஆறுமுகம், மேற்பார்வை பொறியாளர்கள் லதாசெல்வி, கென்னடி, ராமசாமி, செயற்பொறியாளர்கள் ராஜா, ராமசாமி, மயில்வாகனம், ஜான்சிலின் ரெசுலா, ராமலெட்சுமி, தட்சிணாமூர்த்தி, குமார், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்;  அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
Embed widget