மேலும் அறிய

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன

ஹாக்கிபட்டி என்று அழைக்கப்படும் கோவில்பட்டியில் துவங்கியது- அகில இந்திய ஹாக்கி திருவிழா-முதல் போட்டியில் இன்கம்டாக்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் கோவில்பட்டியில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவிலிருந்து பல்வேறு புகழ்பெற்ற ஹாக்கி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்பது வழக்கம்,ஹாக்கி இந்தியா அனுமதியுடன் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோவில்பட்டியில் உள்ள கே ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் லட்சுமி அம்பாள் சுழற் கோப்பை காண அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் இன்று முதல் ஜீன் 2வரை நடைபெறுகிறது.

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

இந்தப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பதிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலியிறுதி போட்டிக்கு தகுதி வரும்.பின்னர் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளன.இந்த போட்டியில் பங்கேற்க உள்ள பல்வேறு அணிகளில் கோவில்பட்டியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

அகில இந்திய ஹாக்கி போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் இருபதாயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

இன்று நடைபெற்ற முதல் போட்டியை முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.முதல் போட்டியில் நேஷனல் சென்ட்ரல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் இன்கம்டாக்ஸ் அணியும் மோதியது. மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற போட்டியில் இன்கம்டாக்ஸ் அணி 1 கோல் அடித்து வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் துவங்கியது அகில இந்திய ஹாக்கி திருவிழா: இந்திய அளவில் 16 அணிகள் பங்கேற்பு

இன்று மாலை நடைபெறும் போட்டியில் யூனியன் வங்கி மும்பை அணியும் அதனை எதிர்த்து டாடா நேவல் ஹாக்கி அகடமியும் , அதனை தொடந்து நடைபெறும் போட்டியில் இந்திய விளையாட்டு ஆணையம் ஹைதராபாத் அணியும் அதனை எதிர்த்து இந்தியன் வங்கி சென்னை அணியும், அதனை தொடர்ந்து நிஸ்வாஸ் புவனேஷ்வர் அணியும் அதனை எதிர்த்து தமிழ்நாடு X1 அணியும் விளையாடுகிறது.இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஹாக்கி பயிற்சியாளர்கள் அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?

Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?

ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?

பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!

Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்

திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில்  தொண்டர்கள்

Embed widget