நாளை மின் தடை: தூத்துக்குடி, கோவை பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
தூத்துக்குடி,கோவை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி,கோவை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மின் தடை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மின் தடை
தூத்துக்குடி மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக மின்வினியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வாகைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை 7.1.2026, புதன்கிழமை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வாகைகுளம் துணைமின் நிலையம் மூலம் மின் வினியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், போடம்மாள்புரம், சிறுபாடு,
திரவியபுரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், பேரூரணி வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மின் தடை
எல்லப்பாளையம் (அன்னூர் வட்டம்) : எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
நீலாம்பூர் (கோவை நகரம்) : முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்




















