மேலும் அறிய

Meenakshipuram: “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன்.

ஒரு கிராமத்தின் கடைசி கதை - பெரியவர் கந்தசாமியின் நிறைவேறாத ஆசை - நிறைவேறாமலேயே காற்றில் கலந்த கந்தசாமி தாத்தா.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

மீனாட்சிபுரம் கிராம்

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றோம். நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து மேல செக்காரக்குடி சென்று அங்கிருந்து மானாவாரி பயிர்களுக்கு இடையே பயணிக்கிறது மீனாட்சிபுரம் சாலை. ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம். இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கு பாதை கிடையாது. கிராமம் முழுவதும் மயான அமைதி, திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன. ஒருசில வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன; ஒன்றிரண்டு வீடுகளின் மேற்கூரை இல்லாமல் உயர்ந்து நிற்கிறது.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்விப் பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தான் கிராமத்தை வரவேற்றது. ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் அமர்ந்திருந்த மயில்கள் நம்ம வண்டி சத்தத்தை கேட்டவுடன் ரெக்கை படபடக்க பறந்து போனது. மக்கள் கூடிக் கண்டுகளித்த பொது தொலைக்காட்சி அறை வெறும் அறையாக காட்சியளித்தது. வாழ்ந்த மக்களின் நினைவுகளை அசை போட்டபடி மவுனியாக நிற்கிறது மீனாட்சிபுரம். ஆனாலும் எஞ்சியிருக்கும் ஒரு மனிதருக்காக இன்னமும் சுவாசித்துக்கொண்டிருந்த மீனாட்சிபுரம் இன்று வாய்மூடி மவுனமாக உள்ளது.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

கந்தசாமி தாத்தா

மீனாட்சிபுரம் கிராமம் வரைபடத்தில் இன்னமும் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தாதான் அந்த மனிதர். அவர்தான் 73 வயதான கந்தசாமி. பள்ளிக்கூடத்தில் இருந்து மேக்கால போகும் சாலையில் மேல்பக்கம் வசித்து வருகிறார் கந்தசாமி, வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாலி, தலையணையுடன் கூடிய திண்ணை படுக்கை என இருந்தது அந்த தனியொரு ராசகுமாரனின் வீடு.  பக்கத்து ஊருக்கு போய் தட்டுமுட்டு சாமான் வாங்கிட்டு வருவதாக தனது இருச்சக்கர வாகனத்தில் வந்தார் கந்தசாமி, வாசலில் அமைந்துள்ள தூணில் இருந்த கயிற்றை கொண்டு வண்டியை கட்டிய அவர், தாக்கோளை கொண்டு வீட்டை திறந்ததும் அவருக்காக காத்திருந்த குட்டி நாய் அவரை வாலாட்டி அப்போது வரவேற்றது.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

300 குடும்பங்கள் வாழ்ந்த கிராமம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கந்தசாமி தாத்தாவை சந்தித்தபோது அவர் நம்மிடம் கூறியவை, சொந்த பந்தங்களோட, சொத்து சுகங்களோட, குழந்தைங்க சிரிப்பு சத்தத்தோட, தினந்தினம் நிறைஞ்ச பண்டிகையோட இருந்த கிராமம்தான் தம்பி இந்த மீனாட்சிபுரம். சுமார் ஐநூறு வருஷமா மக்கள் வாழ்ந்து வந்துருக்காங்க இங்க. என் தாத்தா, அப்பா, நான் எல்லோருமே இந்த கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்கதான். சுத்தி இருக்கிற ஏழு கிராமங்களுக்கு மீனாட்சிபுரம் தான், தாய் கிராமம். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடிவரை கூட, இங்க 150 குடும்பங்கள் இருந்தது.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

தண்ணீர் பஞ்சம், பட்டினி

பொங்கல் பண்டிகை சமயம் எங்க கிராமமே களைகட்டும். பானைகள்ல பொங்கலிட்டு, விளையாட்டு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம்னு... அந்த மகிழ்ச்சி குரல் இன்னமும் என் காதுகள்ல எதிரொலிக்குது. தீபாவளி பண்டிகைக்கு சொந்தகாரங்க இங்க உள்ளவங்க வீட்டுக்கு வந்து பட்டாசு வெடித்து கொண்டாடிட்டு போவாங்க. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள்.. என சகலத்தையும் பார்த்த என் கிராமம், இப்ப தனித்தீவா மாறிக்கிடக்குது. மக்கள் எல்லோரும் ஊரை காலி பண்ணதுக்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததும்தான். எங்க கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செஞ்சது. மழை பெய்யலனா ஊர் பஞ்சமாயிடும்.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்க வாழ்வாதாரம் பரவாயில்லாம இருந்தது. பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை கம்மியானது. அதனால விவசாயம் பொய்த்துப் போச்சு. குடிதண்ணீருக்கு அலைஞ்சு திரிஞ்சோம். இங்க இருந்து 5 கி.மீ. நடந்து தண்ணீய சுமந்து கொண்டு வருவோம். பஸ் வசதி கிடையாது. மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே  கஷ்டப்பட்டுப் போனாங்க. அதுல இருந்து ஒருத்தர் ஒருத்தரா ஊரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க. சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு போனவங்கதான். திரும்ப வரவே இல்லை. மழை பெய்ஞ்சு ஊர் செழிப்பானா திரும்ப வந்துரலாம்ன்னு என்ற நம்பிக்கையில் போனவங்ககூட அவங்க நினைச்சது நடக்கவில்லை.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க

மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. போனவங்க யாரும் திரும்பி எட்டிகூட பார்க்கல. ஒருசிலர் மட்டும் வாரத்துல இருநாள் இங்க இருக்கிற அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவாங்க. இப்போ அதுக்கூட இல்லாமல் வைகாசி திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர், திருவிழாவின் போது தற்காலிக பந்தல் போட்டு வைப்போம், வந்து இருந்து திருவிழா கொண்டாடிட்டு போனா, அடுத்த வைகாசிக்கு தான் வருவாக என அசைபோடும் கந்தசாமி, மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடிதண்ணீர், சாலை வசதி எதுவும் செய்துத்தரல. இப்ப போன மக்கள் திரும்ப வரணும் என்கிறதுக்காக தண்ணீர் தொட்டி, அடிபம்பு, தெருவிளக்கு வசதிகள் செஞ்சு கொடுத்துருக்காங்க. இதை முன்னாடியே செஞ்சிருந்தா மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டாங்க. இப்ப எல்லாரும் அங்கயும் இங்கயுமா செட்டிலான பிறகு மறுபடியும் எப்படி வருவாங்க? நிறைய வீடுகள் இடிஞ்சு போயிருச்சு. எஞ்சியிருக்கிற கொஞ்ச வீடுகளும் இடிந்து விழுற நிலையில்தான் இருக்குது. அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுத்திருந்தாலும் வாழ்வாதரத்துக்கு வழி வேணுமே. அதுக்கு என்ன பண்ணுவாங்க மக்கள்?  என் மனைவி வீரலட்சுமி 16 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. ரெண்டு  மகன்கள், ரெண்டு மகள்கள். அதுல ஒரு மகன் மட்டும் அப்பப்போ செலவுக்கு பணம் கொடுத்து உதவுறான்.

Meenakshipuram:  “ஒரு கிராமத்தின் கதை” - கடைசி வரை யாரும் குடியேறலை... நிறைவேறாத கந்தசாமி தாத்தாவின் ஆசை

மறைந்தார் கந்தசாமி தாத்தா

எனக்கு இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை. வேற எங்கேயும் போக வழியும் இல்லை. நான் சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன். வாழ்க்கைக்கு வழியில்லாத இங்கு வருவார்களா என காரு, பைக் சத்தம் கேட்டா அங்கிட்டு திரும்பி பார்ப்பேன் என்று கூறும் கந்தசாமியின் குரலில், என் உயிர் இங்கு தான் போகனும்னு இங்கிட்டே இருந்திட்டேம்யா என தெரிவித்து இருந்தார். கந்தசாமியின் குரலில், என் உயிர் இங்கு தான் போகனும்னு இங்கிட்டே இருந்திட்டேம்யா என சொல்லி இருந்தார் கந்தசாமி தாத்தா.

தனது இறுதி நாட்களிலும் மீனாட்சிபுரத்திற்கு யாரும் குடிவந்து விடமாட்டார்களா என ஏக்கத்துடனேயே வயோதிகம் காரணமாக தனது இறுதி மூச்சை நிறுத்தி கொண்டார் தாத்தா. இந்த ஊரில் சடங்குகள் செய்ய போதிய பொருட்கள் இல்லாததால் இவரது உறவினர்கள் வாழ்ந்து வந்த அருகில் உள்ள சிங்கத்தா குறிச்சி ஊருக்கு கொண்டு சென்று உரிய சடங்குகள் செய்து மீண்டும் இந்த ஊருக்கு கொண்டு வந்து உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இறுதி யாத்திரையில் நால்வர் சுமந்து செல்ல மீனாட்சிபுர மண்ணிலேயே அவரது உடலை அடக்கம் செய்தனர்.

">

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Breaking News LIVE: விஷச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Breaking News LIVE: விஷச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யாSavukku Shankar | GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
The GOAT Second Single: விஜய்யின் தி கோட் 2வது பாடலில் மறைந்த பவதாரணியின் குரல்.. க்ளிம்ஸ் வீடியோ!
Breaking News LIVE: விஷச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Breaking News LIVE: விஷச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி - மயிலாடுதுறையில் அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
Sivakarthikeyan Seeman Meeting: தம்பி சிவாவுடன் கூட்டணி சேர்கிறாரா சீமான்? வெளியான புகைப்படத்தால் கசிந்த தகவல்!
Sivakarthikeyan Seeman Meeting: தம்பி சிவாவுடன் கூட்டணி சேர்கிறாரா சீமான்? வெளியான புகைப்படத்தால் கசிந்த தகவல்!
பூண்டு, தக்காளி விலை உயர்வால் தஞ்சையில் குடும்பத்தலைவிகள் பெரும் கவலை
பூண்டு, தக்காளி விலை உயர்வால் தஞ்சையில் குடும்பத்தலைவிகள் பெரும் கவலை
Embed widget