மேலும் அறிய

திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ - அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

‘என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது. அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு’ என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த பொருளைக் கேட்டு அடகு கடையை உடைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் மெயின் ரோட்டில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த் வயது 21 என்பவர் நேற்று கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று கொலுசை மீட்க அடகு கடைக்கு வந்த இளைஞர் அரவிந்த் அடகு கடை உரிமையாளரிடம் மூன்றாயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் மகேந்திரா ராம் நீங்கள் கொலுசை 3200 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளீர்கள். ஆனால் 3000 ரூபாய் மட்டுமே கொடுக்கிறீர்கள் ஆகையால் முழு பணத்தை கொடுத்தால் கொழுசை தருகிறேன் என கூறினார்.

திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ -  அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

என்னிடம் 3000 ரூபாய் பணம் இருக்கிறது அந்த பணத்தை வைத்துக்கொண்டு என் கொலுசை கொடு என தகாத வார்த்தையால் திட்டி, கடையில் உள்ள கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன கடை உரிமையாளர் மகேந்திரராம் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பணத்தை குறைவாக கொடுத்து நகை கேட்டு கொடுக்காத காரணத்தினால் கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டி கடையை உடைத்து சேதப்படுத்தியதாக கூறி  இளைஞர் அரவிந்தனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்: ‘என் கொலுசை கொடு’ -  அடகு கடையை உடைத்த இளைஞரை கைது செய்த போலீசார்..!

மேலும் அந்த அடகு கடையில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதில் உள்ள காட்சிகளை சோதனை செய்ய சென்றனர். அப்பொழுது கேமரா பழுதாகி பல நாட்கள் ஆகிறது என காவல்துறையினரிடம் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா எப்பொழுதும் செயல்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் தாங்கள் அலட்சிய போக்கில் இருப்பது கண்டிக்கத்தக்கது உடனடியாக சிசிடிவி கேமராவை சரி செய்து வைக்க வேண்டும் என கடையின் உரிமையாளருக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதே போன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அரவிந்தனை கைது செய்துள்ளனர். அச்சுதமங்கலத்தில் உரிய பணத்தை கொடுக்காமல் அடகு வைத்த நகையை கேட்டு அடகு கடையில் தகராறில் ஈடுபட்டு கடையில் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
Watch Video:
Watch Video: "ராஜா ராஜாதான்" அஜர்பைஜான் நாட்டில் ஒலித்த இசைஞானி பாடல் - பாடியது யார் தெரியுமா?
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
Embed widget