மேலும் அறிய

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்

’’விவசாயி பொன்முடி கடந்த பிப்ரவரி மாதத்தில் மாப்பிள்ளை சம்பா ரகத்தை அறுவடை செய்து வயலை காலியாக விட்டிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கி உள்ளது’’

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூரில் இயற்கை விவசாயி பொன்முடி கடந்த ஆண்டு  இரண்டு மா விவசாய நிலத்தில் மாப்பிள்ளை சம்பா வகை நெல்லை இயற்கை முறையில் நேரடி விதைப்பு செய்தார். 160 நாட்களில் 6 அடி உயரம் வளர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மாப்பிள்ளை சம்பா அறுவடைக்கு தயாரான போது 8 மூட்டை விளைச்சல் கிடைத்தது. இந்த நிலையில் விவசாயி பொன்முடி தனது நிலத்தில் எந்த விதைப்பையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக மாப்பிள்ளை சம்பா மீண்டும் முளைக்கத் தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகிறது. 

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்
 
இதுகுறித்து இயற்கை விவசாயி பொன்முடி கூறுகையில், கடந்த ஆண்டு  இதே இடத்தில் இரண்டு மா நிலத்தில்  மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பு சாகுபடி செய்து கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை செய்தேன். இந்த ஆண்டு சாகுபடி செய்வதற்காக சென்று பார்த்தபோது மழையினால்  மீண்டும் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்துள்ளது அதனால் அந்த பயிருக்கு இயற்கை உரமிட்டு  இரண்டாவது போகமாக இன்னும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
 
மாப்பிள்ளை சம்பா சிறப்புகள்: சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா ரக அரிசியில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.  இந்தவகை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கவும், உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. 

விதையே விதைக்காமல் மீண்டும் முளைத்த மாப்பிள்ளை சம்பா - இன்னும் 5 மாதங்களில் அறுவடைக்கு தயார்
 
தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த இயற்கை நெல் மீட்ப்பாளர் ஜெயராமன் ஆகியோர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தில் உற்பத்தி ஆகும் நெல்களை தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு கண்டிப்பாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் பணியை தொடங்க வில்லை உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நெல்மணிகளை கொள்முதல் செய்யவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"வாக்குக் கேட்க வராதீர்கள்!" 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்! 2026 தேர்தலில் புறக்கணிப்பு முடிவு!
TASMAC Holiday: தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! எப்போ தெரியுமா.? மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
கை நிறைய மெஹந்தி... நெஞ்சில் ஜனநாயகம்! விழுப்புரத்தை அதிரவைத்த தேர்தல் விழிப்புணர்வு - கலக்கிய திருநங்கைகள்!
கை நிறைய மெஹந்தி... நெஞ்சில் ஜனநாயகம்! விழுப்புரத்தை அதிரவைத்த தேர்தல் விழிப்புணர்வு - கலக்கிய திருநங்கைகள்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
Maruti Victoris SUV Milage: பரவாயில்லையே.! SUV-யா இருந்தாலும் இவ்ளோ மைலேஜ் தருதா.? களத்தில் கலக்கும் மாருதி விக்டோரிஸ்
பரவாயில்லையே.! SUV-யா இருந்தாலும் இவ்ளோ மைலேஜ் தருதா.? களத்தில் கலக்கும் மாருதி விக்டோரிஸ்
China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
Top 10 News Headlines: அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
Embed widget