மேலும் அறிய

"வாக்குக் கேட்க வராதீர்கள்!" 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்! 2026 தேர்தலில் புறக்கணிப்பு முடிவு!

மயிலாடுதுறை நகராட்சியில் 35-வது வார்டில் 20 ஆண்டுகளாக சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டில் உள்ள புது வெள்ளாளன் தெருவாசிகள், இரண்டு தசாப்தங்களாகத் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இப்பகுதி மக்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு மாவட்ட நிர்வாகத்திடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருபது கால இருண்ட வாழ்க்கை

மயிலாடுதுறை நகராட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் 35-வது வார்டில் அமைந்துள்ள புது வெள்ளாளன் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியை ஒட்டியிருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி அடிப்படை வசதிகளான சாலை மற்றும் மின்சார வசதிகள் இன்றி ஒரு தீவு போலவே காட்சியளிக்கிறது.

"நாங்கள் வரி செலுத்தும் குடிமக்களாக இருந்தும், எங்களுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 20 ஆண்டுகளாகியும் ஒரு முறையான தார்ச் சாலையோ அல்லது தெருவிளக்கு வசதியோ இங்கு செய்யப்படவில்லை" என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலத் துயரமும் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலும்

இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், லேசான மழை பெய்தாலே தெரு முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சேற்றில் தவித்தபடி நடக்க வேண்டிய கட்டாயத்திலும் மக்கள் உள்ளனர். மிக முக்கியமாக, தேங்கியுள்ள தண்ணீரில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அடிக்கடி புகுந்து விடுவதாகவும் வேதனை.

இது குறித்து அப்பகுதித் மக்கள் கூறுகையில்:

"எங்கள் குழந்தைகள் விளையாடக் கூட அச்சப்படுகிறார்கள். இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் இருட்டில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் தெரிகிறது. எப்போது யாரைக் கடிக்கப்போகிறதோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்கிறோம். இது மட்டுமின்றி, தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது" என கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

பலனளிக்காத மனுக்களும் அதிகாரிகளின் மெத்தனமும்

இது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக மயிலாடுதுறை நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நூற்றுக்கணக்கான மனுக்களை மக்கள் அளித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் "விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற உறுதிமொழி மட்டுமே வழங்கப்பட்டதே தவிர, களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதிகாரிகளின் இந்தத் தொடர் மெத்தனப் போக்கினால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"வாக்களிக்க மாட்டோம்" 

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குக் கேட்டு வருவதாகவும், வெற்றி பெற்ற பின் இந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் உச்சகட்டமாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்கப் போவதாக இப்பகுதி மக்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்;

 * எங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தராத அரசிற்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?

 * இந்த முறை வெறும் மனுக்கள் கொடுப்பதோடு நிறுத்தப்போவதில்லை; தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.

 * வாக்குச் சேகரிக்க எந்த அரசியல் கட்சியினரும் எங்கள் தெருவிற்குள் நுழைய வேண்டாம் எனப் பதாகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மக்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதும், அதன் வெளிப்பாடாகத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதும் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாக்குக் கேட்க வராதீர்கள்!" 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்! 2026 தேர்தலில் புறக்கணிப்பு முடிவு!
திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
திங்கட்கிழமை (மார்ச் 30) மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் - காரணம் என்ன? முழு விவரம் உள்ளே!
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளுக்கான 1,139 EVM இயந்திரங்கள் எங்கே உள்ளது தெரியுமா..? 
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
மயிலாடுதுறை அருகே பறக்கும் படை சோதனையில் வசமாக சிக்கிய கிஃப்ட் பாக்ஸ்கள்- யாருடையது தெரியுமா..?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
Maruti Victoris SUV Milage: பரவாயில்லையே.! SUV-யா இருந்தாலும் இவ்ளோ மைலேஜ் தருதா.? களத்தில் கலக்கும் மாருதி விக்டோரிஸ்
பரவாயில்லையே.! SUV-யா இருந்தாலும் இவ்ளோ மைலேஜ் தருதா.? களத்தில் கலக்கும் மாருதி விக்டோரிஸ்
China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
Top 10 News Headlines: அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
Embed widget