மேலும் அறிய

China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?

மத்திய கிழக்கில், அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்குள் சீனா தற்போது நுழைந்துள்ளது. எதற்காக தெரியுமா.?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து, அது உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த போருக்குள் சீனா நுழைந்துள்ளது. ஆனால், நிலவரத்தை கலவரமாக்குவதற்காக அல்ல. இந்த போரில் சீனா என்ன செய்யப் போகிறது தெரியுமா.? வாருங்க அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்றுவரும் உச்சகட்ட போர்

அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்னையில், ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், அவர்களுக்கு உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி, அங்கு உள்ள எண்ணெய் வளங்களிலும் கை வைத்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளத. ஏனெனில், அரபு நாடுகளில் இருந்துதான் உலகின் பெரும் பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியாகிறது.

மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் முடக்கி வைத்துள்ளதால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையிலும், அந்நாடு தாக்குதல்களை நிறுத்தியபாடில்லை. முன்பை விட இன்னும் தீவிரமாக தாக்கி வருகிறது.

மாறி மாறி எச்சரிக்கை

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தார் ட்ரம்ப்.  ஈரான் அதை செய்யவில்லை என்றால், அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா அவ்வாறு செய்தால், அதற்கு உதவிவரும் நாடுகளும் அதே நிலையில் தாக்கப்படும் என்று எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, கெடு முடிவதற்கு முன்பாகவே, திடீரென தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தங்கள் எச்சரிக்கைக்கு பயந்து பின்வாங்கிவிட்டதாக ஈரான் கூறியது. ஆனால், மறுபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் கூறிவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவின் கண்டனமும், சமீபத்திய ஆஃபரும்

முன்னதாக, போரின் ஆரம்ப கட்டத்தில், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி, இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், ஈரானின் தலைமை மாற்றம், அதன் உள்நாட்டு விவகாரம் என்றும், ஈரானின் அரசியலமைப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறியது.

அதனால், எந்த காரணத்தை காட்டியும், ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவே ஜியாகுன் தெரிவித்தார். அதோடு, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், தற்போது ஈரான் உடனான போரில் மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்காவிடம் சீனா தெரிவித்துள்ளது.

எதனால் இந்த மாற்றம்.?

ஈரான் உடனான பேர் தொடங்குவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தபடி, இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், தற்போது போர் நடைபெற்றுவரும் நிலையிலும், ஏற்கனவே சீனா கண்டனம் தெரிவித்து, போரிலும் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு தராததாலும், ட்ரம்ப்பின் பயணம் தள்ளிவைக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க தரப்பில் அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வரும் மே மாதம் 14, 15 ஆகிய தேதிகளில், அதிபர் ட்ரம்ப் பீஜிங் செல்வதாக வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின் எதிரொலியாகவே, ஈரான் உடனான போரில் அமைதி ஏற்படுவதற்கான மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக சீனா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவின் முயற்சிகள் வெற்றியடையுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget